நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கலை... விரக்தியின் விளிம்பில் விசித்திர போஸ்டர்
மதுரை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி என்ற வாசகத்துடன் முருகேசன் என்பவர் வித்தியாசமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கேதுவார்பட்டியில் வார்டு உறுப்பினராக போட்டியிட்ட முருகேசன் டெபாசிட்டை இழந்தார்.
இந்நிலையில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி வித்தியாசமான முறையில் அவர் போஸ்டர் அடித்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வித்தியாச போஸ்டர்
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கேதுவார்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு இருந்தார். ஆனால் நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார்.

விரக்தி
இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க இப்படி செய்வீங்கன்னு, கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்றும், தோற்கடித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறி போஸ்டர் ரெடி செய்துள்ளார். இந்த போஸ்டரை டிஜிட்டல் வடிவிலும் சமூக வலைதளங்களில் அவர் உலவ விட்டுள்ளார்.

லந்து
மதுரைக்கும் போஸ்டருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ தெரியவில்லை, எப்போதும் மதுரை மாவட்ட அரசியல் பிரமுகர்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலேயே இருக்கும். அந்தளவுக்கு அதில் வாசகங்கள் இடம் பெற்றிருக்கும்.

உலக அளவில்
உலகிலேயே தோற்கடிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட முதல் போஸ்டர் இது தான் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications