மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்க எதுக்கு வந்தீங்க? மதுரை மேயர் இந்திராணி காரை முற்றுகையிட்ட மக்கள்! சமரசம் பேசிய அதிகாரிகள்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணியை 97-வது வார்டு பொதுமக்கள் முற்றுகையிட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    மதுரை மேயர் இந்திராணி காரை முற்றுகையிட்ட மக்கள்! சமரசம் பேசிய அதிகாரிகள்!

    தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மக்கள் ஆவேசம் காட்டினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகளும், காவல்துறையினர் சமரசம் பேசி மேயரின் காருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

    12 ஆண்டுகளுக்குப் பின் தேனி- மதுரை ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்12 ஆண்டுகளுக்குப் பின் தேனி- மதுரை ரயில்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

     97-வது வார்டு

    97-வது வார்டு

    மதுரை 97 -வது வார்டு நிலையூர் அருகே உள்ள துர்கா காலனியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மையம் கட்டுவதற்கு இன்று பூமிபூஜை நடைபெற்றது. அதில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் ஏறிய மேயர் இந்திராணியை அப்பகுதி மக்கள் சிலர் முற்றிகையிட்டனர்.

    எதுக்கு வந்தீங்க

    எதுக்கு வந்தீங்க

    எதற்காக வந்தீர்கள்..? என்ன பூமி பூஜை நடக்கிறது..? இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்காமல் என்ன செய்கிறீர்கள்..? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மக்களின் ஆதங்கத்தை புரிந்து அவர்களை சமரசம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் அதை கேட்டதாக தெரியவில்லை. இதனிடையே மேயர் இந்திராணி தனது காரை விட்டு கீழே இறங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

    அதிகாரிகள் பேச்சு

    அதிகாரிகள் பேச்சு

    தேர்தலின் போது 97-வது வார்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காமல் இருப்பது ஏன் எனவும் வினவினர். மாநகராட்சி அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கத்தை எடுத்துக்கூறி மக்களுக்கு புரிய வைக்க முயற்சித்தனர்.

    காருக்குள் அமர்ந்து

    காருக்குள் அமர்ந்து

    இதனிடையே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மேயர் இந்திராணியின் காருக்கு வழிவிடப்பட்டது. மக்களின் குறைகளை காரில் இருந்து இறங்கி செவிமடுத்து உரிய விளக்கம் தர வேண்டிய மேயர் காருக்குள் அமர்ந்தவாறு அங்கிருந்து சென்றிருப்பது 97-வது வார்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    People who blocked the car of the Madurai mayor:மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணியை 97-வது வார்டு பொதுமக்கள் முற்றுகையிட்ட நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X