அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா? வரலாறு தெரியாதவர்களுக்கு பாஜகவில் பதவி.. மதுரையில் சீறிய ஆர்எஸ் பாரதி!
மதுரை: தமிழ்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் பாஜகவில் பதவியில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் திமுக சார்பாக இந்தித் திணிப்புக்கு எதிராக விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ் பாரதி பேசுகையில், காவல்துறைக்கு தகுதியற்றவர்கள் என்று சொல்லி வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது நம்மிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.

ஆர்எஸ் பாரதி பேச்சு
தமிழுக்கு எந்தவிதமான பணிகளை திமுக செய்துள்ளது என்பதை நமது கடைகோடி தொண்டனுக்கே தெரியும். அவனே பதில் சொல்லி விடுவான். ஹிந்தியை தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் எந்த காலத்திலும் நுழைக்க முடியாது. தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக தான். 1960ம் ஆண்டு ஹிந்தியில் தமிழ்நாட்டில் நுழைக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தபோது கருப்பு கொடி காட்ட வேண்டும் என அண்ணா சொன்னார்.

தோல்வி இல்லை
வரலாற்றை பேசும்போது உண்மை நிலையை தெளிவாக எடுத்து கூற வேண்டும். அதை திருத்தி தவறாக எடுத்துச் சொல்லக் கூடாது. ஹிந்தி எதிர்ப்புக்கு திமுக தியாகம் செய்தது போல இந்தியாவில் வேறு எந்த கட்சியும் தியாகம் செய்தது கிடையாது. பாஜக-வாக இருந்தாலும் மற்ற கட்சிகளாக இருந்தாலும், வரலாறு தெரியாதவர்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள். நான் தொடுத்த வழக்குகளில் எந்த வழக்கிலும் நான் தோல்வி பெற்றது கிடையாது.

இந்தி எதிர்ப்பு
நான் பேசுவதை தவிர்த்து விட்டு வெட்டி ஒட்டி போடுவதை சிலர் வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹிந்தி என்பது எங்குமே கிடையாது. ஹிந்தி எதிர்ப்பு தியாகிகளை மதித்த ஒரே கட்சி திமுக. ஹிந்தி கொண்டு வருவோம் என்று எண்ணினால் தமிழகம் தாங்கிக் கொள்ளுமா? தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் ஹிந்தி எதிர்த்து கண்டன தீர்மானத்தை நிறைவேற்றுகிறார். ஹிந்தி எதிர்ப்புக்கான தீர்மானத்தை நிறைவேற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு அனுப்பியுள்ளார்.

திமுகவை அழிக்க முடியாது
எங்களது திமுகவை யாராலும் அழிக்க முடியாது. எத்தனையோ முறை திமுக அழிந்து விடும் என்று எண்ணினார்கள் ஆனால் நிச்சயமாக அது ஒருபோதும் நடக்காது. எமர்ஜென்சி காலகட்டத்தில் திமுகவில் அமைச்சராக இருந்து பதவி அனுபவித்தவர்கள் எல்லாம் சென்றார்கள். பேராசிரியர் தவிர மற்றவர்கள் எல்லாம் சென்றார்கள். ஆனால் கருணாநிதி தன்னந்தனியாக நின்று திமுகவை தலை தூக்கி நிறுத்தினார்.

பாஜக என்ன ஆனது?
பாஜக என்னும் கட்சி எமர்ஜென்சியில் என்ன ஆனது? எமர்ஜென்சி எதிர்க்க முடிந்ததா? ஜனசங்கம் என்னும் கட்சியை கலைத்துவிட்டு சென்றவர்கள் தான், இப்போது பாஜக என்னும் பெயரில் ஆரம்பித்துள்ளார்கள். தலைவர் கலைஞர் மட்டும்தான் அண்ணா ஆரம்பித்த கட்சியின் பெயர் திமுக என்பதை ஒரு போதும் மாற்ற முடியாது என்ற கொள்கையோடு இருந்தவர்.

ஐபிஎஸ் படித்தாரா?
வேறு ஒரு கட்சியாக இருந்தால் அண்ணாமலையை என்ஐஏ குற்றவாளியாக சேர்த்திருக்கும். சைலேந்திரபாபு 72 வெடிகுண்டு மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார். அண்ணாமலை கோவை வழக்கில் மாற்று கருத்துக்களை சொல்லி வருகிறார். இப்படி கருத்துக்களை மாற்றி சொல்கிற போது குளறுபடி ஏற்படுமா ஏற்படாதா? குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களே, இவர் ஐபிஎஸ் படித்தரா அல்லது போலி சான்றிதழ் வாங்கினாரா?

அண்ணாமலை பொறுப்பு
கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தப்பித்தார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையான பொறுப்பு அண்ணாமலையே. நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் செய்வதற்கு பாஜக தயாராக உள்ளது. குஜராத்தில் 150 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள். அண்ணாமலை என்ன செய்து கொண்டிருக்கிறார். அந்த காண்ட்ராக்டர் யார்? பாஜகவுக்கு டொனேஷன் கொடுத்தவர் தான் என்று குற்றம்சாட்டினார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications