கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி.. யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டுமாம்! மனைவி திடீர் மனு
மதுரை: தமிழ்நாட்டையே அதிர வைத்த கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் குற்றவாளி யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என அவரது மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் பேசிக் கொண்டிருந்தார்.இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. கோகுல்ராஜ் காணாமல் போனதற்கு அடுத்த நாளான ஜூன் 24ஆம் தேதி, பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் உடல் மீட்கப்பட்டது.
தனது மகன் மரணத்தில் சந்தேகம் எழுப்பிய பெற்றோர், இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். ஆனால் யுவராஜ் தலைமறைவானார்.
இரண்டு மாதங்கள் கழித்து சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் யுவராஜ் சரணடைந்த நிலையில், அவரை கைது செய்து பொலீசார் விசாரணை மேற்கொண்டனர். யுவராஜுக்கு எதிராக சாட்சியங்கள் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறின. வழக்கில் யுவராஜ் குற்றவாளி என்று நிரூபிப்பதே மிகுந்த சிரமமானது.
எனவே வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்திலிருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியது.
அதேபோல யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் வந்து சென்றதற்கான சிசிடிவி காட்சிகள் கோகுல்ராஜ் தரப்புக்கு பக்க பலமாக அமைந்தது. இதனையடுத்து அனைத்து சாட்சியங்களையும் விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் யுவராஜை குற்றவாளியாக அறிவித்து 3 ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தது.
7 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. இந்நிலையில், தனது கணவர் வருமான வரி கட்டுகிறார் எனவே அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வேண்டும் என்று கேட்டு யுவராஜின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு குறித்து சேலம் ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் கோவை மத்திய சிறை நிர்வாகம் 4 வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications