எங்க ஊர் பேரையே மாற்ற பாக்குறாங்க ஐயா.. ஆத்திக்காட்டுவிளையை சியோன்புரமாக்க முயற்சி! பரபர வழக்கு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்திக்காட்டுவிளை என்னும் பெயரை சியோன் புரம் என மாற்றக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனு குறித்து பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆத்திக்காட்டுவிளை என்ற கிராமம் உள்ளது. அரசு பதிவேடுகளில் ஆத்திக்காட்டுவிளை என்ற பெயரே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

madurai high court kanyakumari

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆத்திக்காட்டுவிளை என்ற ஊரின் பெயரை சீயோன் புரம் என அந்த ஊரின் பெயரை மாற்ற திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சத்துணவுக் கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அரசுப் பதிவேடுகளில் ஆத்திக்காட்டுவிளை என்பதற்குப் பதிலாக சியோன்புரம் என பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் மத ரீதியாக ஆத்திக்காட்டுவிளை என்ற பெயரை சீயோன் புரம் என மாற்ற ஒரு சாரார் திட்டமிட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்


இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்திக்காட்டுவிளை என்னும் பெயரை ஜியோன்புரம் என மாற்றக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.


அதில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்திக்காட்டுவிளை என்னும் கிராமம் உள்ளது. ஊரின் பெயரை மாற்றுவது தொடர்பாக பிரச்சனைகள் எழுந்த நிலையில் நீதிமன்றம் ஆத்திக்காட்டுவிளை எனும் பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து இடங்களிலும் ஆத்திக்காட்டுவிளை எனும் பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் குக்கிராமமான ஜியோன்புரம் எனும் பெயரை இப்பகுதி முழுமைக்கும் மாற்றும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி, சத்துணவு கூடம், பஞ்சாயத்து அலுவலக பதிவேட்டில் ஜீயோன்புரம் எனும் பெயர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றின் ரசீதுகளிலும் ஜீயோன்புரம் என பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்க பலகைகளிலும் ஆத்திக்காட்டுவிளை என்னும் பெயரே பயன்படுத்துவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, "மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+