மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லீம்கள் கருப்பு நாளாக கருதும் டிச. 6 பாஜகவுக்கு புனித நாள் - பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

மதுரை: முஸ்லீம்களின் கருப்பு நாளாக கருதும் டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: பசும்பொன்னில் 113 வது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு வணங்குவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

தன்னலமற்ற தேசபக்தியும், ஆன்மீக கொண்டவராக இருந்தவர் தேவர் திருமகனார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு நேற்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

தெய்வ வழிபாடு இல்லாவிட்டாலும், திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சி அளிக்கிறது. ஸ்டாலினுக்கு இறை வழிபாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை தெய்வ நம்பிக்கையை அவமதிக்க கூடாது. விருப்பம் இல்லாவிட்டால் ஸ்டாலின் மறுத்திருக்கலாம், அதை விடுத்து உதாசீனப்படுத்த தேவையில்லை.

கடவுள் மறுப்பு

கடவுள் மறுப்பு

பெரியாரை விட கடவுள் மறுப்பை கொண்டவர் வேறுயாருமில்லை. அவரே ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திருநீறை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பசும்பொன்னில் நிகழ்ந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். அனைவரும் வர வேண்டிய இடம். நம்பாதவர்களுக்கு ஓட்டு குடுக்க கூடாதா நிலைமை வரும்.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு தமிழக ஆளுநர் உத்தரவு வழங்கியது பாராட்டதக்கது. முஸ்லிம்களின் கருப்புநாளாக கருதும் டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள். அத்தினம் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்த நாள் என்பதாலேயே வேல் யாத்திரையை முடிக்க உள்ளோம்.

அச்சம்

அச்சம்

வேல் யாத்திரையை எதிர்ப்பவர்களுக்கு அச்சம் வரத்தான் செய்யும். நாங்கள் தண்டிக்கப்போவதில்லை. 5 வருடமாக நளினி, பேரறிவாளன் 7 பேர் விடுதலைக்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். ரஜினி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பாதிக்கும் கட்சியினர் இது போன்ற அவதூறாக அறிக்கையை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்க வாய்ப்புள்ளது.

பாஜக நிச்சயம் வெற்றி பெறும்

பாஜக நிச்சயம் வெற்றி பெறும்

2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக இரண்டு இலக்கு தொகுதிகளில் வெற்றி பெறும். புல்வாமா தாக்குதல் குறித்து ராகுல்காந்தி 130 கோடி மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டின் அமைச்சர் புல்வாமா தாக்குதல் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு இந்தியாவை அச்சப்படுத்த எந்த கொம்பனும் கிடையாது என்றார்.

English summary
EX Union Minister Pon Radhakrishnan says that Dec 6 is the sacred day for Hindus, but its black day for Muslims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X