ஜெயலலிதா சிங்கம்.. எடப்பாடி சிங்க குட்டி! தேர்தல் வர வர ஸ்டாலினுக்கு பதற்றம்! சொல்வது செல்லூர் ராஜூ!
மதுரை: அமைச்சர் பொன்முடி எப்போதும் பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசுவது தொடர் கதையாக இருந்து வருகிறது எனவும், தேர்தல் நெருங்க நெருங்க தமிழக முதல்வருக்கு இன்னும் பதற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளர்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதி பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும், ஏட்கூடி அச்சம்பத்து S.V.K நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மக்களுக்கு உண்மையான விடியல் மேற்கு பகுதியில் ஏர்கூடி அச்சம்பத்து தங்கமணி நகர் போக்குவரத்து நகருக்கு செய்து கொடுத்திருக்கிறேன். அமைச்சர் பொன்முடி எப்போது பெண்களையும்., தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

பொன்முடி இழிவாக பேசியதற்கு முதன் முதலில் எதிர்த்து பேசியது நான் தான். அமைச்சர் பதவியே ஓசி தான்., அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு அரசாங்க பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்கள் படுகிற துயரத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற ஆளில்லை. மக்கள் கஷ்டம் முதல்வருக்கு லேட்டாக தான் தெரியும். இந்த மக்களும் சாதாரண இளைஞர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை வாழ வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு இல்லை. அடுத்த முதல்வர் எடப்பாடி தான் என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த 9ஆம் தேதி கோட்டையில் நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி மக்களை திசை திரும்புகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து என்றார்கள். நாங்களும் ஏதேதோ நம்பினோம். கையெழுத்து வாங்கினார்கள். சேலம் மாநாட்டில் அந்த கையெழுத்தை காலில் வைத்து மிதித்தது தான் மிச்சம்.
அதிமுக பாஜக கூட்டணியை யாரும் எதிர்பார்க்கவில்லை., தேர்தலிலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும். அதெல்லாம் தேர்தல் வியூகம்., நீட் தேர்வு குறித்த கூட்டம் இதெல்லாம் ஏமாற்று வேலை. ஊடகங்கள் கற்பனை வசனங்கள் எழுதுகிறது., எங்கள் பொது செயலாளர் சொன்னாரா.? நீங்க எல்லாம் கற்பனை ஊடகத்திற்கு போறீங்க. சங்கர் படம் மாதிரி இந்தியன் ஒன்று வெற்றி பெற்றது. இந்தியன் 2 பிளாப் ஆன மாதிரி EPS மோடி சந்திப்பு பற்றி ஊடகங்கள் எங்களை பற்றி கற்பனை உலகத்திற்கு கொண்டு சென்று எழுதுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நம்பிக்கை எத்தனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. அது குறித்து திருமாவளவன் பேசுறாரா? எங்கம்மா எட்டடி பாய்ந்தார் என்றால் எடப்பாடி 16 அடி பாய்வார்.! எங்கள் அம்மா சிங்கம் என்றால்., அவர் வழியில் வந்த எடப்பாடி சிங்க குட்டி.! கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளரிடம் கேளுங்கள்.! இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை., திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
சட்டமன்ற கூட்டத்தில் ஆளும் கட்சி அதிமுக என முதல்வர் பேசுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க முதல்வருக்கு இன்னும் பதற்றம் ஏற்படும். பாமக கட்சியில் பிளவு குறித்து பேசக் கூடாது. அது குடும்ப விவகாரம். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்" என்றார்.












Click it and Unblock the Notifications