பூனைக் குட்டி வெளிய வந்துருச்சு.. பங்காளிச் சண்டைகள் போதும்! மதுரையில் சிரித்த சசிகலா.. அதகள அதிமுக!
மதுரை: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பல்வேறு இடங்களில் டெபாசிட் இழந்ததோடு சில இடங்களில் நான்காம் இடத்தை பெற்ற நிலையில், அதிமுக மீண்டும் ஒன்றுபட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் பங்காளிச் சண்டை போதும் என சசிகலாவுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம், 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது.

இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமியும், சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
காரணம் எடப்பாடி தலைமையேற்றதுக்கு அடுத்து 2019ஆம் ஆண்டிலிருந்து அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. 2019 மக்களவை தேர்தல், 6 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஊராக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத் தேர்தல், தற்போது மக்களவை தேர்தல் என எடப்பாடி தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சியை தோல்வியடையச் செய்திருக்கிறார்.
இதனால் அவர் மீது ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் அதிமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் சசிகலா மீண்டும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காய்களை நகர்த்தி வருகிறார். மேலும் இனியும் பொறுக்க முடியாது, அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென நீண்டதொரு அறிக்கையும் விட்டிருந்தார். இது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. தமிழகத்தின் பிரதானமான எதிர்கட்சி சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக இருந்த போதும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக களத்தில் இறங்காது என அறிவித்திருப்பது அந்த கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கு முன்னர் அதிமுகவும் அல்லது சில கட்சிகளும் தேர்தலை புறக்கணித்து இருக்கின்றன.
ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட களத்தை சந்திக்கும் நிலையில் அதிமுக வெளியேறி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. தோல்வி பயம் காரணமாக அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என திமுகவினரும் பாஜகவினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து பிரிந்து சென்ற சில நிர்வாகிகள் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் திடீர் பரபரப்பாக அதிமுகவில் பங்காளி சண்டைகள் போதும் என மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை பெற்றிருக்கிறது.
தமிழக மக்களின் தன்மானம் காக்க அழைக்கிறார் என்ற தலைப்போடு மதுரை முழுவதிலும் சசிகலாவிற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. மதுரையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர்,” பங்காளி சண்டைகள் போதும்! தமிழக மக்களின் தன்மானம் காக்க அழைக்கிறார் எனவும், நமது அம்மாவின் 'அம்மா, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாசகங்களுடன் அச்சிடப்பட்டுள்ள போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications