பரபரக்கும் மதுரை.. ஆபீஸ் வந்தவர்கள் திருப்பியனுப்பி வைப்பு.. முர்மு வருகையால் முடங்கிய மாசி வீதிகள்
ஜனாதிபதி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர இருப்பதால் அதற்காக பல முன்னேற்பாடுகள் நடைபெற்றிருக்கிறது.
மதுரை: ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக இன்று 18ஆம் தேதி சனிக்கிழமை மதுரை வருகிறார்.
ஜனாதிபதியின் வருகையால் மதுரையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வருகையால் அங்கு இருக்கும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதியின் வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக இன்று மதுரைக்கு வருகிறார். காலை 11:30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர இருக்கிறார். விமான நிலையத்திலிருந்து காரில் பலத்த பாதுகாப்போடு ரிங் ரோடு, தெப்பக்குளம் வழியாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலை வந்தடையும் ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்புகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரங்களுக்கு முன்பே மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. வாகன சோதனையும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. சில நாட்களாக மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நடைபாதை கடைகள் அடைப்பு
கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடை பாதை கடைகள் அகற்றப்பட்டு, கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று நாட்கள் முகாமிட்டு மதுரையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். மதுரையை சுற்றியுள்ள நிறுவனங்கள் கடைகளில் ஒரு நபர் மட்டுமே மூன்று நாட்களாக வேலை செய்ய அனுமதி கிடைத்தது. அவர்களுடைய ஆதார் கார்டு செக் பண்ணி விட்டு தான் அவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர்.

போஸ்ட் ஆபீஸ் விடுமுறை
இன்று ஜனாதிபதியின் வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் மற்றும் ஆபீஸ்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக போஸ்ட் ஆபீஸ் போன்ற கவர்மெண்ட் ஆபீஸ்களும் விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆபீசுக்கு வந்த பணியாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

மீண்டும் எப்போது திறப்பு
காலையில் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அவர்களும் இப்போது கடைகளை அடைக்க சொல்லி அறிவித்து வருகிறார்கள். ஏற்கனவே நேற்று, இன்று கடைகள் திறக்க கூடாது என்று கூறியிருந்த நிலையில் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அதுவும் இப்போது மூடிக்கொண்டு இருக்கின்றனர். கடைகள் எல்லாம் 1:30 மணிக்கு மேலே திறக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே போஸ்ட் ஆபீஸ் இன்று சனிக்கிழமை ஆப் டே என்பதால் போஸ்ட் ஆபீசுக்கு இன்று லீவு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications