மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரைக்கு எய்ம்ஸ் தந்தவர் பிரதமர் மோடி - துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் மோடி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: தமிழகம் மருத்துவக் கல்லூரியில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கினார் பிரதமர் மோடி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் பிரதமர் மோடி என்று ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசாரம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. பிரதமர் மோடி மதுரையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

Prime Minister Modi gave AIIMS to Madurai - Deputy Chief Minister OPS

கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்துக்கு பாரத பிரதமர் ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறார்கள். கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்களையும் அளித்து வருகிறார்கள் என்றார்.

தமிழகம் மருத்துவக் கல்லூரியில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கினார் பிரதமர் மோடி. 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி கொண்டு வர உறுதுணையாக இருந்தார் என்று மோடியை புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், தமிழக தாய்மார்கள் சகோதர சகோதரிகள் தான் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஓபிஎஸ், பிரதமர் மோடி ரியல் ஜல்லிக்கட்டு ஹீரோ என்றும் புகழாரம் சூட்டினார்.

English summary
Deputy Chief Minister O. Panneer Selvam has said that Prime Minister Modi has given permission to set up 11 medical colleges in a single year so that Tamil Nadu can progress in medical colleges. O. Panneer Selvam has hailed Prime Minister Modi as the person who helped bring the AIIMS Hospital College in Madurai worth Rs 1500 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X