மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை பக்கத்தில் வரவிடாமல்.. மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி..!
மதுரை: மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
எப்போதும் தன்னை சுற்றி நிற்கும் பாதுகாப்பு அதிகாரிகளை இன்று சற்று தள்ளியே வைத்திருந்தார் ராகுல்.
இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக ராகுலை சந்திக்க முடிந்த காட்சிகளை மதுரையில் காண முடிந்தது.

பந்தா இல்லை
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார் ராகுல். இதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த அவர் அதற்கு பிறகு தென் பழஞ்சி என்ற ஊருக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் முறையை கவனித்தார்.

மக்களுடன் மக்களாக
பின்னர் அங்கு மக்களுடன் மக்களாக மதிவு உணவு சாப்பிட ராகுல் அமர்ந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த தென்பழஞ்சி கிராம மக்கள் ராகுல்காந்தியுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிட போட்டி போட்டனர். இதேபோல் இளைஞர் காங்கிரஸில் உள்ள ஏராளமான இளைஞர்கள் ராகுல்காந்தியுடன் செல்ஃபி எடுக்க விரும்பினர்.

ராகுல் அனுமதி
இதனை அறிந்த ராகுல்காந்தி தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்பிய இளைஞர்களை அருகில் அழைத்து செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு போஸ் கொடுத்தார். அப்போது ராகுலை சுற்றி கூட்டம் நெருக்கியடித்ததை பார்த்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவர்களை விலக்க முயன்றார். ஆனால் அதனை தடுத்த ராகுல் இளைஞர்கள் விரும்பியபடி அவர்களுடன் செல்ஃபி எடுத்து பின்னரே அங்கிருந்து புறப்பட்டார்.

ராகுல் புகழாரம்
ராகுல்காந்தியின் இந்த எளிய அணுகுமுறையை கண்ட பொதுமக்களும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்தளவுக்கு அவர் எளிமையான மனிதராக இருப்பார் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறிக்கொண்டனர். டெல்லி விமானம் ஏறுவதற்கு முன்னர் மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார்கள் தமிழக மக்கள் என புகழாரம் சூட்டிச் சென்றார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications