அடுத்த சர்ப்ரைஸ் தந்த ரயில்வே.. யார் யாரெல்லாம் ரயில்வே சலுகை அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்?
மதுரை: ரயிலில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வரும்நிலையில், ரயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ள.. மாற்றுத்திறனாளி பயணியர், ரயில்வே சலுகை அடையாள அட்டையை எளிதாக பெறுவதற்காகவே, இந்த புதிய வசதியை ரயில்வே அறிமுகம் செய்து உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ரயில்வே சேவையின் தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது.. எனவேதான், ரயில்களின் எண்ணிக்கையையும், ரயில்களில் போதுமான வசதிகளையும் இந்தியன் ரயில்வே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

அதேபோல, பயணிகளின் வசதிகளுக்காகவும் புதிய சேவை திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், மாற்றுத் திறனாளிகளுக்காகவே, ஸ்பெஷல் அறிவிப்புகளை ரயில்வே அவ்வப்போது வழங்கி வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு, 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை பயன்படுத்தியே, இந்த கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.
ரயில்வே அலுவலகங்கள்: இதற்கு பிறகு, அடையாள அட்டை பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்த அட்டையைப் பெற கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்கு சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து பிறகு அடையாள அட்டையை பெற வேண்டும்.
இந்த நடைமுறைகளை எளிதாக்கி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெற புதிய இணையதள வசதியை தற்போது இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களை https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும்.
பயணச்சீட்டு: இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி ரயில்வே பயணச் சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணையதளம் வாயிலாகவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம்.
அதுபோல அடையாள அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது யூடிஎஸ் செயலி மூலமும் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் பதிவு செய்யலாம். இந்த புதிய முறையால் எளிதாக அணுகலாம். கால நேர விரயமும் தவிர்க்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை விதிமுறைகளும் இந்த இணையதளத்தில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பயண சலுகை அட்டை: மாற்றுத்திறனாளிகள் பயண சலுகை அட்டையை ஆன்லைனில் எப்படி பெறுவது? யார் யார் இதற்கு தகுதியுடையவர்கள்? என்பது குறித்து ரெயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"நாடு முழுவதும் ரெயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இந்த கட்டண சலுகையை பெறுவதற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்திற்கான அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம்: இதற்காக அந்தந்த ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் இருக்கும் வணிகப்பிரிவு அலுவலர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் கட்டண சலுகை அட்டையை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள ரெயில்வே நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.
இந்த டிஜிட்டல் மயம் வசதியானது, தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
சலுகை அடையாள அட்டை: இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் சலுகை அடையாள அட்டையை பெறவும், புதுப்பிக்கவும் ரெயில்வே அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதற்காக https://divyangjanid.indianrail. gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மாற்றுத்திறனாளி பயணிகள், தங்களின் சலுகை அடையாள அட்டையை பெற அல்லது புதுப்பிக்க தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களுடன் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு தகுதியுடைய நபர்களாக பார்வை குறைபாடு உள்ள நபர்கள், பார்வை முழுமையாக இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள நபர்கள், எலும்பியல் ஊனமுற்றோர், முடக்குவாத நபர்கள் ஆகிய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
அடையாள அட்டை: இந்த சலுகை அடையாள அட்டையை பெறும் மாற்றுத்திறனாளிகள், சலுகையுடன் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்டர்கள் அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான சீசன் டிக்கெட் பெறவும், இந்த அடையாள அட்டை பயன்படுகிறது. இந்த டிஜிட்டல் மயத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications