சுட்டெரித்த வெயிலுக்கு பிரேக்.. மதுரையில் வெளுத்த மழை
மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், இன்று நல்ல மழை பெய்தது.
மதுரை அடுத்த இரண்டு நாட்களுக்கு பருவ மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தத நிலையில் இன்று வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக, காலை முதலே, மதுரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

மதிய வேளையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், கோரிபாளையம், சிம்மக்கல், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.
கடந்த 5 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்த மக்கள், கன மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
[800 கோடி வரி ஏய்ப்பு...கட்டுக்கட்டாக சிக்கிய 8 கோடி ரொக்கம்..முடிவுக்கு வந்த வி.வி.மினரல் ஐடிரெய்டு!]
வட கிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளதாகவும், கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications