Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தத்தின் ரத்தமே.. எடப்பாடி பழனிச்சாமியை ரத்த கையெழுத்து போட்டு வரவேற்கும் ஆர்.பி. உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவிற்கு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ரத்தத்தால் கையெழுத்திட்டு வரவேற்கும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.

அதிமுக உட்கட்சி மோதல் பிரச்சினைகள் ஒருவழியாக முடிந்து விட்டதாக சொன்னாலும் நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது. அதிமுக பொதுசெயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துவிட்டார். பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கிய போதும் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தது. தேர்தல் ஆணையம் பச்சைக் கொடி காட்ட ஒட்டுமொத்த கட்சியும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்று விட்டது என்றாலும் ஓ.பன்னீர் செல்வம் விடுவதாக இல்லை.

RB Udayakumar welcomes Edappadi Palanisami with a blood signature

சட்ட ரீதியாக எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபித்தாலும் தொண்டர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதை தேர்தலில் தான் பார்க்க முடியும். அதிமுகவின் உச்ச பதவியை பிடிக்க தனக்கு தடையாக இருப்பார்கள் என சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். மூன்று பேரும் முக்குலத்தோர் சமூகம் என்பதால் தென் மண்டலத்தில் அதிமுக வலுவிழந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இதனாலே கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தி நிகழ்வுக்கு பசும்பொன் செல்வதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார். உடல்நிலை காரணமாக சொல்லப்பட்டாலும் தேவையற்ற பிரச்சினையை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என்று அப்போது கூறப்பட்டது.
ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து நீக்கியதால் எடப்பாடி பழனிச்சாமி மீது தேவர் சமுதாய மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதே சமுதாயத்தை சேர்ந்த ஆர்.பி.உதயகுமார் மீதும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'எடப்பாடி பழனிச்சாமி வாழ்க' என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் விரட்டி அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல தென் மண்டலத்திலும் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவே மதுரையில் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட மாநாடு நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அப்போதும் கூட மதுரை தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பசும்பொன் சென்று தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில் பசும்பொன் கிராமத்தில் வருகிற 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் பாரதீய பார்வர்டு பிளாக் நிறுவனர் முருகன்ஜி ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சேலத்தில் சந்தித்து தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் புரட்சி பார்வர்ட் பிளாக் ஆண்டித்தேவர் பிரிவு தலைவர் முத்துராமன், முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் மறத்தமிழர் சேனை ஆதிமுத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை கண்ணன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு அகமுடையார் மக்கள் தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் 27ஆம் தேதி காளையார் கோவிலில் நடைபெறும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக ரத்தத்தால் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்நாட்டு பாதுகாவலர். இது போன்று ஆயிரம் ஆயிரம் வளர்ச்சி திட்டங்களை, முன்னோடி திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, முதன்மையான திட்டங்களை தாய் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக வாரி வாரி வழங்கிய கருணையின் வடிவம் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் புண்ணிய பூமியாம் பசும்பொன் மண்ணிற்கு நேரிலே வருகை தர உள்ளார்.

தெய்வ திருமகனாரின் திருக்கோவிலில் தமிழர் குலச்சாமி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்திட்ட 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஏழாம் படைவீடாம் பசும்பொன்னில் தெய்வ திருமகானாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி அருளாசி பெற்றிட புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் பொற்பாதம் வணங்கி கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் இரத்த கையெழுத்து இட்டு வணங்கி வரவேற்கிறது. "இரத்தம் இரத்த உறவை அழைக்கிறது" என்றும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

இந்த ரத்த கையெழுத்து இயக்கம் பற்றி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார். தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், சட்டசபை எதிர்கட்சித்தலைவர், வருங்கால தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அம்மா பேரவை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகமும் ரத்தம் ரத்த உறவை அழைக்கிறது என்பதை அடையாளமாக எடுத்துக்காட்டும் வகையில் ரத்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கும் விதமாக அழைப்பிதழில் அனைவரின் ரத்த கையெழுத்தை பெற்றுள்ளோம் என்று கூறினார்.

அதிமுக தொண்டர்களை என் அன்பான ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பார் எம்ஜிஆர். அதை நிரூபிக்கும் விதமாக தற்போது ரத்தத்தில் கையெழுத்து போட்டு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் ஆர்.பி. உதயகுமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+