இதையே தான் அந்த டெய்லரும் சொன்னான்.. பன்னீர்செல்வம் பிளாஷ்பேக்.. பங்கப்படுத்திய உதயகுமார்
மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரம்மாண் கூட்டணி, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. திமுகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் பிளாஷ்பேக் ஒன்றை சொல்லி ஆர்.பி உதயகுமார் அவரை பங்கமாக கலாய்த்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "உங்களுக்கும், உங்கள் பிள்ளைக்கும் பதவி வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று சொன்னார்கள். நாங்கள் யாராவது தடையாக இருந்தோமா. சம்பாதித்த காசை எல்லாம் கொடுத்து பதவி வாங்கிக் கொள்ளலாம் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள். என்னமோ நாசமாக போங்கள். எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. [RB Udhayakumar]

ஓபிஎஸ் பதவிகள்
பொதுப்பணித்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், வீட்டு வசதி வாரிய அமைச்சர் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அனுபவித்துள்ளார். சொல்லவே எனக்கு மூச்சு வாங்குகிறது. உங்களுக்கு கட்சி எவ்வளவு பதவிகளை கொடுத்துள்ளது.
கிளைக்கழக தொண்டனாக பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி கொண்டிருந்தவருக்கு, இந்த நாட்டையே ஆளுமளவுக்கு அடையாளப்படுத்தியது அதிமுக. உங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய அம்மாவின் படத்தை நீக்கிவிட்டு, இன்றைக்குள்ள முதலமைச்சர் படத்தை வைத்து பூஜை செய்கிறார். இதுபோன்ற ஈனப்பிறவியை தமிழ்நாடு சந்தித்ததில்லை. எல்லாம் ஒரு ஜான் வயிறு தான். ஒருமுறை பிறக்கிறோம். ஒருமுறை சாகப் போகிறோம்.
ஒரு ஜான் வயிறு தான்
ஒருமுறை தான் வாழப் போகிறோம். அம்மா அம்மா என அவரின் புகழை பாடிவிட்டு, இங்கு சம்பாதித்த பணத்தை திமுகவில் சேர்ந்து அவரின் புகழையே அழிக்க பார்க்கிறார். விசுவாசம் என வேஷம் போட்டு இத்தனை பதவிகளை பெற்றுள்ளார். இனிமேல் அவர் திமுகவில் எத்தனை பதவிகள் பெற்றாலும், அது துரோகத்திற்கான பரிசு தான். விசுவாசத்திற்கான பரிசு கிடையாது.
உயிர் இருக்கிற வரை ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்பேன் என ஓபிஎஸ் பேசுகிறார். இதே டெயலாக் தானே அம்மாவிடமும் பேசினார். சட்டசபையில் பதவி இருக்கிறது. அதையெல்லாம் நாங்கள் கேட்டுள்ளோம். இந்த ஜென்மத்திலேயே காட்டி கொடுத்துவிட்டு, 7 ஜென்மமும் விசுவாசமாக இருப்பேன் என பேசுகிறார். இப்படி வயிறு வளர்க்க வேண்டுமா. அப்படி பதவி வாங்க வேண்டுமா.
ஆண்டவனிடம் தான் முறையிட வேண்டும். அம்மாவை விட வேமகாக செயல்படுகிறார் என்றெல்லாம் பேசுகிறார். மனசாட்சி வேண்டாமா. நாக்கு அழுகி போகாதா" என்று கேள்வி எழுப்பினார். உதயக்குமார் பேசிய வீடியோ சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications