இனி சாலையோர பிரச்சாரத்திற்கு.. எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தெளிவாக சொன்ன தமிழக அரசு
மதுரை: கரூரில் விஜய் பிரச்சாரத்தின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. அப்போது தமிழக அரசு சார்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் புதிதாக இனி கூட்டங்கள் நடந்த அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் வாரவாரம் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். அதன்படி கடந்த வாரம் அவர் கரூருக்கு பிரச்சாரத்திற்குச் சென்ற நிலையில், அப்போது மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. விஜய் பிரச்சாரத்திற்கு வந்த போது திடீரெனக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக இப்போது தமிழ்நாடு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

ஐகோர்ட் மதுரை கிளை
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் கடந்த திங்கள்கிழமை சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், நீதிபதி அப்போது வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டனர். கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதன்படி மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
மொத்தம் 7 வழக்குகள் தொடரப்பட்டன நிலையில், இன்று அவை விசாரணைக்கு வந்தன. வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மட்டும் மாற்ற முடியும் என்றும் விசாரணை இப்போது தொடக்கக் கட்டத்திலேயே இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
தமிழக அரசு
அதேபோல கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் புதிதாக இனி சாலையோரப் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்த அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. SOP, அதாவது விரிவான விதிகள் வகுக்கப்படும் வரை சாலைகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படாது எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் ஏற்கனவே அனுமதி வாங்கப்பட்ட கூட்டங்களுக்குத் தடை இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?
அதேபோல போலீசாரிடமும் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. நீதிபதிகள் இது தொடர்பாக, "மாநில நெடுஞ்சாலையில் பிரச்சாரத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்.. அனுமதி கடிதம் எங்கே? கரூர் பிரச்சாரத்தில் குடிநீர் தரப்பட்டதா? பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்
பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்பட்ட பிறகே கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றனர். மேலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசும் இதே நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.
சிக்கல் தான்
கரூரில் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து விஜய் பிரச்சாரம் முதலில் ஒரு வாரம் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சில வாரங்கள் வரை ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விதிமுறைகள் வகுக்கப்படும் வரை சாலை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றம் கூறியிருப்பதால் விஜய் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
-
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications