'போலீஸ்' தேர்வு எழுத வந்த 'திருடன்' விஜயகாந்த்.. அள்ளி கொண்டு போன போலீஸ்.. பரபர பின்னணி
போலீஸ் தேர்வு எழுதிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான்
மதுரை: போலீஸ் தேர்வு எழுதிய விஜயகாந்த் என்ற பிரபல செயின் பறிப்பு கொள்ளையனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த விஜயகாந்த். 22 வயதாகிறது. ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ இவருக்கு ஆசை. அப்பா பூ வியாபாரி.. அதில் பெரிசாக வருமானம் இல்லை.
தான் உழைச்சு சம்பாதிச்சாலும், உடனே தன் ஆசைகள் நிறைவேறாது என்பதால், செயின் பறிப்புதான் இதற்கு சரி என்று முடிவுக்கு வந்தார். படித்து கொண்டிருந்த பிகாம் படிப்பையும் பாதியிலேயே விட்டுவிட்டார்.

சிசிடிவி காமிரா
நண்பர்களுடன் சேர்ந்து நகை பறிப்பு வேலையில் இறங்கி வந்தார். பல பகுதிகளில் இருந்து செயின் பறிப்பு என்று போலீஸ் ஸ்டேஷனிலும் புகார்கள் வரவும், போலீசார் இது சம்பந்தமாக விசாரித்தனர். அப்போதுதான், விஜயகாந்தின் உருவம் ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது.

நண்பர்கள்
அதனால் தலைமறைவாகி இருந்த விஜயகாந்த்தை தேடி வந்தனர். ஆனால் பல மாதங்களாகியும் இவரை பிடிக்க முடியாமல் இருந்தனர் போலீசார். அப்போதுதான், விஜயகாந்த், போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளார் என்றும், எப்படியும் தேர்வு எழுத வருவார் என்றும் அவரது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

கைது
அதன்படியே, அழகர்கோவில் பகுதியில் விஜயகாந்த் தேர்வு எழுத வந்தார். விழுந்து விழுந்து தேர்வு எழுதி கொண்டிருப்பதை ரகசியமாக போலீசாரும் கண்காணித்தனர். பின்னர் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, மதுரை புதூர் போலீசிலும் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கூட்டாளிகள்
திருடிய நகைகளை கொண்டு ஜாலியாக இருந்துள்ளார் விஜயகாந்த். அந்த பணம் காலியானதும், திரும்பவும் செயின் பறிப்பு என இறங்கி உள்ளார். இதுசம்பந்தமாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதுடன், செயின் பறிப்பில் ஈடுபட்ட மற்ற கூட்டாளிகளையும் தேடி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications