வாயை திறந்தாலே ஆபாசம் என புகார்.. டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கா ஜோடி மதுரையில் கைது
மதுரை: யூடியூப் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் தனது காதலன் சிக்காவுடன் சேர்ந்து அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மதுரையில் வைத்து டிக்டார் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்காவை கோவை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்துள்ளனர்.
டிக்டாக் செயலி மூலம் பலர் பேரையும் புகழையும் பெற்றனர். தங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை வைத்து பலர் நல்ல மாதிரியாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகினர். ஆனால் சிலரோ ஆபாசத்தையே மூலதனமாக கொண்டு டிக்டாக்கில் பெரிய இடத்தை பிடித்தனர்.
சீனாவின் டிக்டாக் செயலி முடக்கப்பட்டிருந்தாலும் யூடியூப சேனலை தொடங்கி வருமானத்தை பார்த்து வருகிறார்கள். அவர்களில் மக்கள் எதிர்ப்பது ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர், ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, இலக்கியா, திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர் ஆபாசமாக நடிப்பதும் ஆபாசத்தை பேசுவதும் என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ரவுடி பேபி சூர்யா கைது செய்ய கோரிக்கை
இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இவர்களை கைது செய்யுமாறு ஜெனிபர் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீஸிலும் கமிஷனர் அலுவலகத்திலும் தமிழக டிஜிபி அலுவலகத்திலும் ரவுடி பேபி சூர்யா மீதும் சிக்கா மீதும் புகார் கொடுத்திருந்தார். இவரை போன்ற நிறைய பெண்கள் புகார் கொடுத்தனர்.

யூடியூப் சேனல்
ஆன்லைன் வகுப்பில் படிக்க குழந்தைகள் செல்போனும் கையுமாக இருக்கும் நிலையில் இவர்கள் இது போல் ஆபாசமாக பேசுவதை தடை செய்யக் கோரியும் இவரது யூடியூப் சேனலை முடக்கக் கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பூரில் இருந்த ரவுடி பேபி சூர்யா, தன்னை விட வயது அதிகமான சிக்கா எனும் சிக்கந்தருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

மது குடிக்கும் ரவுடி பேபி சூர்யா
அவருடன் ஆபாசமாக வீடியோ போடுவார். லைவ் வீடியோவில் இருவரும் சேர்ந்து மதுகுடிப்பது, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது என இருப்பார்கள். இந்த நிலையில் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டை வரும், பின்னர் சில நாட்களில் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

சிக்கா சொந்த ஊரான மதுரையில்
இந்த நிலையில் திருப்பூரில் இருந்த ரவுடி பேபி சூர்யாவை தனது சொந்த ஊரான மதுரைக்கு அழைத்து சென்ற சிக்கா அங்கு வீடு பார்த்து குடியமர்த்தினார். இந்த நிலையில் சிக்கா தனது குடும்பத்தினருடன் இணைய ரவுடி பேபி சூர்யாவை சந்திப்பதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரவுடி பேபி சூர்யா ஒருபுதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரவுடி பேபி சூர்யா- சிக்கா ஜோடி கைது
அதில் துபாய்காரர் ஒருவருடன் எனது வாழ்க்கையை தொடங்க போவதாக அறிவித்துள்ள சூர்யா தனது வீடியோவில் இவனோட வெளியே போனாலே அவரு உங்க தாத்தாவா அப்பாவானு கேக்கறாங்க. இந்த மாதிரி இருக்கும் போதே இவனுக்கு இத்தனை திமிரு. துபாய்காரன் 4 மாசத்துல வந்துடுவான். இனி என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதிலிருந்து இவர்களுக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இந்த நிலையில் ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீஸார் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications