ரியல் எஸ்டேட் மோசடி.. ரூ. 5000 கோடி ஏமாற்றிய நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
மதுரை:நிலத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றிய நியோமேக்ஸ் இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புகாரில் சிக்கியுள்ள நிறுவன இயக்குனர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
நிலம் வாங்கித் தந்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக சொல்லி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த ஓராண்டு காலமாகவே புகார் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிறுவனம் பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில், இன்று நியோ மேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வீரசக்தி உள்பட மூன்று பேர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர், ஜெயசங்கீஸ்வரன் ரூ.73.50 லட்சத்தை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார். வட்டியும் தரவில்லை முதலீடு செய்த பணத்தையும் தரவில்லை என்கிற புகார் காரணமாக, மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி குப்புசாமி தலைமையில் நடைபெற்ற சோதனையில் நியோ மேக்ஸ் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ததில் முறைகேடு நடந்தது ஊர்ஜிதமானது. மேலும், நெல்லை, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என பல ஊர்களில் உள்ள நியோ மேக்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள், முகவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். நியோ மேக்ஸ், சென்ட்ரியோ ஆகிய ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெல்லை கிளை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே அந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாயில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் நிறுவன பங்குதாரர்களின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டதாகவே கணக்கில் காட்டி மோசடி செய்திருக்கின்றனர் என்று முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். தங்களின் முதலீடு திரும்ப கிடைக்குமா? பல லட்சம் பணம் திரும்ப வருமா என்று கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications