மதுரை காமராஜ் பல்கலையில் ஊதிய முறையில் மாற்றம்? சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு கோரிக்கை!
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கழத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்க நிதிக்குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதில் தலையிட்டு பழைய முறையை தொடர செய்ய வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலைக்கழக நிர்வாக ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 18ம் தேதி நிதிகமிட்டி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு ஏப்ரல் 24ம் தேதி (நாளை) கூடும் சிண்டிகேட் கூட்டத்தில் அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த முடிவு என்பது முந்தைய முடிவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

மேலும் இந்த செயல்பாடு என்பது கடந்த மாதம் 13ம் தேதி அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்கள், துணைவேந்தர்களின் ஆலோசனைக்கு பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு முற்றிலும் முரணானது. ஏனென்றால் அன்றயை தினம் உயர்கல்வித்துறை அமைச்சர், ‛‛அரசு பல்கலைக்கழங்களில் Teaching மற்றும் Non Teaching ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவது தொடர்பாகவும், அனைத்து மாணவர்களுக்கும் பொது தேர்வு கட்டணம் கொண்டு வரும் வகையில் அரசு சார்பில் குழு அமைக்கப்படும்'' என கூறியிருந்தார்.
அதோடு தற்போது அனைத்து ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள் நிதி துறையின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 7 வது ஊதியக்குழுவின்மூலம் அரசு ஊதிய விகிதங்களுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்படவேண்டும். சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழங்களில் பொது ஊதிய விகிதத்துக்கு பதிலாக தலைமை செயலக ஊதிய விகிதம் பின்பற்றப்பட்ட வருகிறது. இதனை தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதோடு 23.01.2019ம் தேதி வெளியான சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவில் இதுதொடர்பாக தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக அறிவுறுத்தலின்படி எதையும் நிறுத்தி வைக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு தான் கடந்த 2022 மார்ச் 22ல் சிண்டிகேட் தீர்மானத்தை வாபஸ் பெறுவதாகவும், அதன்பிறகு நிதி கமிட்டி மற்றும் சிண்டிகேட் நடைமுறைப்படுத்திய தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் பல்கலைக்கழக உச்சநிர்வாககுழுவான செனட் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனால் கடந்த 2022 மார்ச் 30ம் தேதி செனட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாதுகாக்கவும், உத்தரவை நிறைவேற்றும் வகையிலும் சிண்டிகேட் உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். மேலும் கடந்த 18ம் தேதி நிதிக்குழுவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை திரும்ப பெற சிண்டிகேட் உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications