சர்கார் திரையிடப்பட்ட தியேட்டர் முற்றுகை.. எம்எல்ஏ தலைமையில் குவிந்த அதிமுகவினர்.. பதற்றம்
Recommended Video

மதுரை: மதுரையில், சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்கம் முன்பாக, அதிமுகவினர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சனம் செய்திருப்பதாகவும், வில்லி கதாப்பாத்திரத்திற்கு கோமளவள்ளி என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதுபோன்ற செயல்களுக்காக, படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மதுரையில் உள்ள சினிபிரியா திரையரங்கு முன்பாக முற்றுகையிட்டு அதிமுகவினர் இன்று மதியம் தர்ணா நடத்தினர்.
#Sarkar #Sarkar100CrIn2Days #ThalapathyVijay #IncredibleSARKAROpening கேட்குதா......... கதறல் சத்தம் கேட்குதா....... தளபதி டா!
— GLDBURG (@mersalbala1387) November 8, 2018
மதுரை: சினிபிரியா தியேட்டர்! pic.twitter.com/Fwe5vOmSbb
போராட்டத்திற்கு தலைமை வகித்த, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நிருபர்களிடம் கூறுகையில், இதுபோன்ற போராட்டங்கள் சர்கார் ஓடும் பிற திரையரங்குகள் முன்பாகவும் நடத்தப்படும். எங்கள் கோரிக்கை குறித்து ஆலோசிப்பதாக தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் என்றார்.
போராட்டம் தொடரும் என ராஜன் செல்லப்பா அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications