சாத்தான்குளம் தீர்ப்பு! வெள்ளைச் சீருடையில் 9 போலீஸார்! தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 9 போலீஸாரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனராம். மேலும் அவர்கள் தற்போது தண்டனை கைதிகள் என்பதால் அவர்களுக்கு கைதிகளுக்கான வெள்ளை சீருடை வழங்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகனை கொடூரமாக அடித்துக் கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து ஆகியோருக்கு நேற்றைய தினம் தண்டனை அறிவிக்கப்பட்டது.

அவர்கள் 9 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனையை நீதிபதி முத்துக்குமரன் வழங்கினார். அதாவது தனித்தனியே தண்டனை என்ற பெயரில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் தனித்தனியே அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாது பலரும் வரவேற்றுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கில் 9 பேருக்கும் எப்போது தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சாத்தான்குளம் சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
9 பேருக்கும் இதுவரை காவல் துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் பிழைப்பூதியம் நிறுத்தப்படும். இவர்கள் 9 போலீஸாரும் இனி கடும் குற்ற வழக்கின் கைதிகளாகவே கருதப்படுவர்.
காலையில் விசாரணை கைதிகளாக சென்ற 6 பேரும் மாலையில் தண்டனை கைதிகளாக மதுரை சிறைக்கு திரும்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக சில ஆண்டுகளாகவே சிறையில் தண்டனை பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், ரகு கணேஷும் தனி செல்லில் உள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள தனி செல்லில் உள்ளனர். இவர்கள் யாரும் தற்கொலை போன்ற விபரீத முடிவை எடுக்கக் கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் சிறை காவலர்கள் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.
மரண தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 9 பேரும் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். தண்டனை கைதிகள் என்பதால் இவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் வெள்ளை சீருடைக்கான துணி வழங்கப்பட்டது. அதை சிறையில் உள்ள டெய்லரிடம் கொடுத்து தைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications