சாத்தான்குளம் வழக்கு.. மரண தண்டனைதான் தீர்வா? முன்னாள் காவல் அதிகாரி கேள்வி!
மதுரை: சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்திருக்க கூடாது நாம் விரும்பினோம்.. அப்படி இருக்கையில், அந்த தவறுக்கு மரணம்தான் தீர்வா? என்று முன்னாள் ஏசிபி ராஜேந்திர ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த, ராஜேந்திர ராஜா தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்திருந்தார். குறிப்பாக மரண தண்டனை குறித்து விரிவாக பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, "வழக்ககளில் தண்டனை என்பது ரொம்பவும் முக்கியமானது. இதுபோன்ற சமூக குற்ற வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர் ப.பா.மோகன் போன்றோர் கூட, ஆயுள் தண்டனையை பற்றிதான் பேசுகிறார்கள்.
கொடிய சமூக குற்றத்திற்கு அயுள் தண்டனை கிடைக்கிறது எனில், அந்த தண்டனை சமூகத்தில் பேசுபொருளாகவே இருக்கும். இந்த வழக்கில் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது எனில், தண்டனை பெற்றவர்களின் உறவினர்கள் மூலமாக சமூகத்தில், தண்டனையும் அதற்கான காரணமும் பேசு பொருளாகவே இருக்கும். இந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு அயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று பேசப்படும்.
ஆனால், இதுவே இவர்களை தூக்கில் போட்டுவிட்டால், நாளையோ அல்லது இன்னும் சில நாட்கள் கழித்தோ, இந்த செய்தி பழைய செய்தியாய் போய் மறைந்துவிடும்.
எனவேதான் பல நாடுகளில் தூக்கு தண்டனை வேண்டாம், ஆயுள் தண்டனை மட்டும் போதும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த காரணத்திற்காகத்தான் 1846ல் மெக்சிகன் சட்டமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்திவிட்டது. இப்படியாக உலகம் முழுவதும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாளர், எதிர்ப்பாளர் என்று 2 பிரிவுகள் இருக்கின்றன. இன்று வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தூக்கு தண்டனைக்கு ஆதரவு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
சமூகம் சீர்திருத்தப்பட்ட வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் கொல்லப்பட்டிருக்கக்கூடாது என்பதுதான் இந்த வழக்கு. ஜெயராஜும், பென்னிக்ஸும் கடையை மூடியிருந்தால், அவர்களை திருத்தியிருக்கலாம், கொல்லப்பட்டிருக்க கூடாது என்பதுதான் இந்த வழக்கு. இப்படியான வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை தனிப்பட்ட கருத்திலிருந்து சரியா? தவறா? என்று சீர்தூக்கி பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. அப்படி இருக்கும்போது, இதற்கு இதுதான் தீர்வு சொல்வது சரியில்லை" என கூறியிருக்கிறார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications