திருப்பரங்குன்றம்: இந்துத்துவா அமைப்பினருடன் வந்த CISF வீரர்கள்! தடுத்து திருப்பி அனுப்பியது போலீஸ்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. மனுதாரர்களுடன் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து செல்லவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று மாலை கோயிலுக்கு முன் கூடிய இந்துத்துவா அமைப்பினர், அரோகரா என்கிற முழக்கத்துக்கு பதில், பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்களின் மண்டை உடைக்கப்பட்டது.

நிலைமை மோசமடைந்த நிலையில், 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். இந்நிலையில், கோயிலுக்கு தீபம் ஏற்ற வந்த மனுதாரர்களும் உடன் வந்த சிஐஎஸ்எப் வீரர்களும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
