தமிழ்க் கடவுள் கருணாநிதி.. அன்பில் மகேஷ் சொன்ன வார்த்தை.. கொந்தளித்த சீமான்!
மதுரை: முன்னாள் முதல்வர் கருணாநிதியை தமிழ்க்கடவுள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய கருத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தன்னலவாதிகள் பெருகியதால் தமிழினம் அவமானப்பட்டு நிற்பதாக கூறிய சீமான், கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்மையில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், தமிழ்க் கடவுள் என்று சொன்னால், முன்னாள் முதல்வர் கருணாநிதியை தவிர வேறு யாரையும் சிந்தித்து பார்ப்பதில்லை. தமிழால், தமிழினத்திற்காக தமிழகத்தை 5 முறை ஆண்டவர் அல்லவா நமது தமிழ் ஆண்டவர். அதற்கு காரணம், கருணாநிதியின் உழைப்பு. உழைப்புக்கான உரிய அங்கீகாரத்தை தருவது நமது தமிழினம்.

அன்பில் மகேஷ் பேச்சு
அதேபோல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான அரணாக, ஆண்டவனாக விளங்கக் கூடியவர் முதல்வர் ஸ்டாலின். அதனால் உழைப்பிற்கு அங்கீகாரம் என்று சொன்னேனே.. அந்த அங்கீகாரத்தை யாரிடம் இருந்து பெற்றார் தெரியுமா.. கருணாநிதி வாயில் இருந்து உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.. அதற்கு பெயர்தான் ஸ்டாலின் என்ற பெயரை பெற்றவர் முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
சீமான் பேட்டி
அமைச்சர் அன்பில் மகேஷின் கருத்து தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், இதனை கேட்டுட்டு யாருக்கும் கோபம் வரவில்லைல.. அப்போது இன உணர்வு, மான உணர்வு கெட்டுப்போன ஈனக் கூட்டமாக மாறிவிட்டதால், எதையும் பேச முடிகிறது. மதுரையில் கட்டிய நூலகத்திற்கு வள்ளல் பாண்டித்துரை தேவரின் பெயரை வைக்க முடியாதா?
ஜல்லிக்கட்டு, கருணாநிதி
ஜல்லிக்கட்டுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்.. அந்த அரங்கிற்கு மூக்கையா தேவரின் பெயரை வைக்கக் கூடாதா? ஏன் எங்க அடையாளம் வந்துவிடும் அல்லவா.. இந்த விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் என்று பெயர் வைத்தால் தானே பிரச்சனை.. பாண்டியன் நெடுஞ்செழியன் என்று வைக்கலாமே.. யார் கேள்வி கேட்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தமிழினத்திற்கு அவமானம்
கருணாநிதி தான் தமிழ்க் கடவுள் என்று சொல்லுவதை கேட்டுக் கொண்டு.. தன்னலவாதிகள் பெருகியதால் இந்த இனம் அவமானப்பட்டு நிற்கிறது. சுயமரியாதைக்கு இயக்கம் கண்டவர்கள் தமிழினம். மானத்திற்காக உயிரைவிட்டவர்கள் தமிழர்கள். அந்த இனத்தில் பிறந்த கூட்டம் இன்று ஒரு சீட், 2 சீட், அற்ப வாரியப் பதவி.. இதற்கு முட்டிக்கால் போட்டு நின்று கொண்டு அவமானப்படுகிறார்கள்.
செம்மொழி விவகாரம்
அதனைவிடவும் கேவலம் அவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு பேசுகிறவர்கள். எல்லா அநீதிகளையும் சகித்து கொண்டு இருப்பதற்கு பெயர் தான் ஜனநாயகம்னா எப்படி.. கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி தினமாக கொண்டாட நினைக்கிறார்கள்.. செம்மொழிக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்.. எங்கு மொழி இருக்கிறது?
கீழடி விவகாரம்
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கருணாநிதி வாங்கி கொடுத்ததாக சொல்கிறீர்கள்.. அதுவரை அடமானம் இருந்ததா? சிறந்தே பிறந்தமொழி தமிழ்.. நடராசன் இறந்தநாள் தான் செம்மொழி நாளாக இருக்க வேண்டும். வள்ளுவரின் பிறந்தநாளை கொண்டாடுங்கள்.. கீழடியை ஏன் 2 ஏக்கர் நிலத்தை மட்டும் தோண்டிவிட்டு மூடி சென்றார்கள்?
தமிழர் நாகரீகம்
அதனை தோண்டினால் தமிழனின் தொன்மம் தெரிந்துவிடும். அவர் வந்தால் இந்திய நாகரீகம் என்கிறான்.. நீ திராவிட நாகரீகம் என்கிறாய்.. தமிழர் நாகரீகம், தமிழர் பண்பாடு என்று சொல்வதற்கு ஏன் வலிக்கிறது.. இது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார். சீமானின் பேச்சு அக்கட்சியினர் மத்தியில் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications