ரெய்டு.. மோடியை பார்த்து ஸ்டாலின் பயந்துட்டாரு! அதனால் தான் இந்த வரவேற்பு! சீண்டிய செல்லூர் ராஜு..!

Subscribe to Oneindia Tamil

மதுரை : வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரத பிரதமருக்கு வரவேற்பு அளித்ததாகவும், ஒன்றிய பிரதமர் என கூறி வந்த தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமர் என கூறி வரவேற்கின்றார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

Recommended Video

    மோடியை பார்த்து ஸ்டாலின் பயந்துட்டாரு! அதனால் தான் இந்த வரவேற்பு - செல்லூர் ராஜு

    மதுரை அதிமுக சார்பில் திமுக, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அதிமுகவுக்கு வரவேற்றார்.

     முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு," ஒன்றிய பிரதமர் என கூறி வந்த தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமர் என கூறி வரவேற்கின்றார்.. ஏன் இந்த முறை நரேந்திர மோடி அவர்களை ஒன்றிய பிரதமர் என அழைக்கவில்லை. வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பயந்து தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமரை வரவேற்பு அளிக்கின்றார்

    பழனிவேல் தியாகராஜன்

    பழனிவேல் தியாகராஜன்

    ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதிமுக கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள். அதிமுகவின் கொள்கை ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பிடித்ததால் எங்களது கட்சியில் இணைகின்றனர். தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கான கமிஷன் தொகை கிடைக்காததால் , பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளார்.

    இரண்டு அமைச்சர்கள்

    இரண்டு அமைச்சர்கள்

    நீதித்துறை மற்றும் வணிகவரித்துறை ஆகிய இரண்டு அமைச்சர்களும் மதுரையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு முறை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம் அப்போது கேரள அரசு எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.

    சமாளிக்க முடியவில்லை

    சமாளிக்க முடியவில்லை

    ஆனால் தற்போது அண்டை மாநிலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கொடுக்கும் நெருக்கடியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமாளிக்க முடியவில்லை. ரூல்கரவ் திட்டத்தின் மூலம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தனது தேர்தல் வாக்குறிதியை நிறைவேற்றாததால் அக்கட்சியினரே திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தற்போது இணைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+