அண்ணாவை பற்றி அவதூறு பேசினால் நாக்கு ''துண்டு.. அழுகிவிடும்''.. சாபம் விட்ட செல்லூர் ராஜூ!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு ''துண்டு.. அழுகிவிடும்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாபம் விட்டுள்ளார்.

இதைப் படிப்பவர்களுக்கு அதென்ன துண்டு.. அழுகிவிடும் என எண்ணத் தோன்றலாம். நாக்கு துண்டாகிவிடும் எனக் கூறவந்த செல்லூர் ராஜூ, சுதாரித்துக் கொண்டு அழுகிவிடும் என மாற்றிக்கொண்டார்.

எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அண்ணாமலைக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், அண்ணாமலையாவது, உண்ணாமலையாவது என கலாய்த்திருந்தார்.

Sellur Raju has cursed that the tongue of those speaking will rot if they speak defamatory about Anna

இப்போது தனக்கே உரிய பாணியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார். முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்கிற வகையில் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக, திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிய தருணத்தில் அண்ணாமலையின் அண்ணா குறித்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கின்றன. இரண்டு கட்சிகளின் தலைமையும் கூட்டணி தொடர்வதாக அறிவித்தாலும் தொண்டர்கள், நிர்வாகிகள் மனமுவந்து தேர்தல் பணியாற்றுவார்களா என்பது சந்தேகமே.

Sellur Raju has cursed that the tongue of those speaking will rot if they speak defamatory about Anna

அண்ணாவின் பெயரை தாங்கியுள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டே அண்ணாவை பற்றி அண்ணாமலை விமர்சித்து பேசியிருப்பது, இவருக்கு அதிமுகவுடனான கூட்டணியில் விருப்பமில்லையோ என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+