திருப்பரங்குன்றம்: நட்பு அடிப்படையில்தான் பாஜகவுக்கு ஆதரவு! அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜு
மதுரை: மதுரையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம் என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நட்பின் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "மத வழிபாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சகோதர-சகோதரிகளாகத்தான் இஸ்லாமியர்களுடன் பழகுகிறோம். இங்கு ஜாதி, மதம் என்கிற பிணக்கே கிடையாது. முன்னர் இந்த மலைத்தொடர்பாக பிரச்சனை வந்தது. ராமநாதபுரம் எம்பிதான் இந்த பிரச்சனையை கிளப்பினார்.

இப்பொழுது ஒருவர் மனு போட்டு தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று கேட்கிறார். தூண், சிக்கந்தர் தர்காவிலிருந்து 15 மீட்டர் தள்ளி இருக்கிறது. வேறு ஒரு குன்றில் இருக்கிறது. எனவே அந்தத் தூணில் விளக்கு ஏற்ற நீதியரசர் அனுமதி கொடுக்கிறார். விளக்கு ஏற்றுவதற்காகதானே அங்கே தூண் அமைக்கப்பட்டிருக்கிறது? தூணில் விளக்கு ஏற்றுவதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
மதுரையில் நாங்கள் சகோதர, சகோதரிகளாக, அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம். ஆனால், அரசு இந்த பிரச்சினையை மதப் பிரச்சினையாக தேர்தலுக்காக வளர்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது" என்று கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் கல் தூண், தீப தூண் என்றும் அதில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்து சமய அறநிலையத்துறை இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில்தான் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. வழக்கை நீதிபதி விசாரிக்கிறார். தீப தூண் என்று சொல்லப்படும் தூணை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் டிச.1ம் தேதி இந்த வழக்கில் உத்தரவை கொடுக்கிறார். அதாவது டிச.3ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மனுதாரர் கோரிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறார். ஆனால் டிச.3ம் தேதி மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடுகிறார்.
கார்த்திகை தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். ஆனால், இதுவரை தீப தூணில் விளக்கை ஏற்ற எந்த ஏற்பாடுகளும் நடக்கவில்லை என்று முறையிடுகிறார். அப்படியெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக தாக்கல் செய்ய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிடுகிறார். அதேபோல வழக்கும் தாக்கல் செய்யப்படுகிறது. நேரம் மாலை 6 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. நேரம் 6 மணியை கடந்தது. விளக்கு ஏற்றப்படவில்லை.
எனவே, நீதிமன்றத்தில் பாதுகாப்புக்காக இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை அழைத்துக்கொண்டு சென்று மனுதாரர் தீபம் ஏற்றலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பிக்கிறார். அதற்குள் திருப்பரங்குன்றம் மலைக்கு கீழ் கூடியிருந்த இந்து அமைப்பினர் கலவரத்தில் இறங்கினர். இதனால் ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பிக்கிறார். இப்படியாக தொடர்ந்து தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியுள்ளது.
இந்த சூழலில், திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கும் கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!












Click it and Unblock the Notifications