என்ன மாயமோ மந்திரமோ தெரியல! மதுரையில் பிடிஆர் போட்டோவ பார்க்க முடியல! கொளுத்திப் போட்ட செல்லூர் ராஜூ
மதுரை: என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை மதுரையில் பிடிஆர் போட்டோவை பார்க்கவே முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்டுள்ளார்.
முதலமைச்சரின் மதுரை வருகை குறித்து நேற்றுக் கூட ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்ததாகவும் அதில் கூட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணிக்கப் பட்டிருந்ததாகவும் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் பாசம் காட்டுவது போல் வஞ்சிப் புகழ்ச்சி அணியில் அவரை தொடர்ந்து கலாய்த்து வருகிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வஞ்சி புகழ்ச்சி அணியில் பேசி வருகிறார்.
ஆனால் அதே நேரம் அமைச்சர் மூர்த்தி பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் வாயே திறப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது. அப்படி அவர்களுக்குள் என்ன ஒரு புரிந்துணர்வோ தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் அமைச்சர் பிடிஆரை மட்டுமே செல்லூர் ராஜூ சீண்டி வருகிறார்.
இதனிடையே திமுக ஆட்சியில் எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும் மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதனும், துணை மேயர் நாகராஜனும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துகொள்கிறோம் என கூறும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும் இதற்கு காரணம் நிதி இல்லாதது தான் காரணம் எனவும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை தவிர கடந்த 2ஆண்டுகளில் எந்தவொரு புதிய திட்டமும் வரவில்லை என்றார்.
இதே நிலை நீடித்தால் மக்களை திரட்டி விரைவில் போராட்டம் ஒன்று நடத்துவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனிடையே தனது பிரஸ் மீட்டின் போது, ''பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தார், பாவம் அவர், இப்போ ஏதோ ஒன்றை கொடுத்து டம்மி பண்ணிடாங்க'' என குத்தலாக செல்லூர் ராஜூ பேசினார்.












Click it and Unblock the Notifications