எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே.. செங்கோட்டையனை நினைத்தால்.. சீண்டிய நயினார் நாகேந்திரன்!
மதுரை: மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை நினைத்து வருத்தமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக செங்கோட்டையனை நன்றாக தெரியும் என்று கூறிய நயினார் நாகேந்திரன், என்டிஏ கூட்டணியின் அனைத்து முடிவுகளும் தமிழ்நாட்டிலேயே எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நயினார் நாகேந்திரன் கூறிய ஒரு வார்த்தையால், அவரை டெபாசிட் இழக்க செய்வோம் என்று செங்கோட்டையன் முழங்கி இருந்தார். தற்போது அமமுக கூட்டணிக்கு வந்த சூழலில், நயினார் நாகேந்திரன் மீண்டும் சீண்டிருக்கிறார்.

அதேபோல் தவெக நிர்வாகி செங்கோட்டையன், தவெக கூட்டணி பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள் என்று புலம்பி இருந்தார். இந்த நிலையில் மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணன் செங்கோட்டையனை எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவரை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன்.
எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் என்ற வருத்தம் தான். தமிழ்நாட்டின் கூட்டணியில் டெல்லி எந்த விஷயத்திலும் தலையிடுவதில்லை. பாமக கூட்டணியை இறுதி செய்தது எடப்பாடி பழனிசாமி தான். டிடிவி தினகரன் கூட்டணியும் சென்னையில் தான் இறுதி செய்யப்பட்டது. அதனால் செங்கோட்டையன் சொல்வது எந்த வகையில் சரி என்பது தெரியவில்லை.
ஓபிஎஸ் குறித்து எந்தக் கருத்தையும் இப்போது சொல்ல முடியாது. எங்கள் கூட்டணியில் ஓபிஎஸ் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது ஓபிஎஸ் கூட்டணிக்கு வருவதும், வராததும் காலம் தான் சொல்ல வேண்டும். என்டிஏ கூட்டணியை நோக்கி ஒவ்வொரு கட்சியாக வந்து கொண்டே இருக்கிறது. திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்ததே இல்லை.
எம்ஜிஆர் காலத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது திமுக தான். 1972க்கு பின் எம்ஜிஆரிடம் தோற்றுக்கொண்டே இருந்தார்கள். அதேபோல் அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் தொடக்கம் முதலே கூறி வருகிறேன். டிடிவி தினகரனின் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு என்ற கருத்துக்கு இப்போது என்னால் கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம் குறைவு என்றே பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் பக்கம் ஓபிஎஸ் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்












Click it and Unblock the Notifications