2 ஜெட் விமானங்கள் பாதுகாப்போடு சிங்கப்பூர் சென்ற மதுரை விமானம்.. பயணிகள் பீதி.. என்னாச்சு
மதுரை: மதுரையில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வசிக்கும் பகுதி இல்லாத வான் தடம் வழியாக இரண்டு ஜெட் விமானங்கள் பாதுகாப்புடன் ஏர் இந்தியா விமானம் சாங்கி விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்தடுத்து சுமார் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

ஆனால் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் அனைத்தும் வெறும் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்களில் மதுரையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானமும் அடங்கும். இந்த நிலையில் தான், சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு சொந்தமான இரண்டு ஜெட் விமானங்கள் ஏர் இந்தியா விமானத்தின் பாதுகாப்புக்காக வந்தது.
RSAF F-15SGs என்ற இரண்டு ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பூர் சென்ற விமானத்துடன் வானில் பறந்து வந்தது. இது குறித்து சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் என் ஜி இங்க் ஹென் கூறுகையில், "மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்ட IX 684 என்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பயணிகள் விமானத்தை, RSAF F-15SG என்ற இரண்டு ஜெட் விமானங்கள் பாதுகாப்புடன் அழைத்து வந்தன.
விமானம் தரையிறங்கியதும் தரையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த (GBAD) பாதுகாப்பு அமைப்பும் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு EOD-ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது" என்றார். எனினும், இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மதுரை - சிங்கப்பூர் சென்ற விமானத்தில் மட்டுமின்றி மேலும் 9 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த விமானங்கள் அவசர அவசரமாக பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. டெல்லி - சிகாகோ விமானம், டாமன் - லக்னோ இண்டிகோ விமானம், தர்பங்கா - மும்பை இடையே இயக்கப்படும் ஆகாஷா ஏர் விமானம், அயோத்யா - பெங்களூர் எர் இந்தியா எக்ஸ்பிரஸ், பகதோஹ்ரா டூ பெங்களூர் விமானம், அமிர்தசரசில் இருந்து டேராடூன் மற்றும் டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள், மதுரை டூ சிங்கப்பூர் சென்ற விமானங்கள் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதேபோல் நேற்று முன்தினம், 2 இண்டிகோ விமானம் மற்றும் ஒரு ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அனைத்து விமானங்களும் பல்வேறு விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவங்கள் விமான பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications