மதுரையில் 30% SIR படிவங்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு!
மதுரை: மதுரையில் 30 சதவிகித SIR படிவங்கள் மட்டுமே கொடுத்திருப்பதாக என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் ஒரு பூத்தில் கூட 100% படிவங்கள் அளிக்கப்படவில்லை என்று கூறிய சு.வெங்கடேசன், வாக்குச்சாவடிக்கு முன்னால் வாக்கற்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் நின்று போராடும் வரை இந்த பிரச்சனை இருக்க போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. SIR படிவத்தை நிரப்ப முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த படிவத்தை நிரப்ப திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் களத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே SIR படிவத்தை சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேல் கொடுத்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், SIR படிவங்கள் வாக்குச்சாவடி அலுவலர்களின் கைகளுக்கு 60 முதல் 70 சதவிகிதம் வரை சென்றுள்ளது. அவர்களிடம் இருந்து 40 சதவிகித படிவங்கள் மட்டுமே வீடுகளுக்கு சென்றுள்ளது. SIR படிவங்கள் கொடுக்க தொடங்கி 15 நாட்கள் நிறைவடைந்துவிட்டது. இதுவரை ஒரேயொரு பாகத்திலாவது 100 சதவிகித SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம் என்று சொல்ல முடியுமா?
ஒரு பாகத்தில் 1,500 வாக்குகள் இருக்கும்.. ஒரு பூத்தில் 100 சதவிகித படிவங்கள் அளிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையரால் சொல்ல முடியுமா? ஒரு பூத்திலேயே முழுமையாக படிவங்களை கொடுக்க முடியாத போது, எப்படி 100 சதவிகித வாக்காளர்களை எப்படி சேர்க்க முடியும்? இது ஒரு திட்டமிட்ட குழப்பம். பணியாளர்களுக்கு போதுமான பயிற்சி கூட கொடுக்கப்படவில்லை.
எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் அவர்களை பணியில் இறக்கி இருக்கிறீர்கள். இப்போது இருக்கும் வாக்காளர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் நட்டாற்றில் போய் நிறுத்துகிறார்கள். 2002 மற்றும் 2005 வாக்காளர்கள் வெறும் 40 சதவிகிதம். அதற்கு பின் இணைந்த வாக்காளர்கள் தான் அதிகம். அவர்களை எப்படி சேர்ப்பது என்ற தெளிவான பதில் கூட இல்லை.
இதனை வாக்குச்சாவடி அதிகாரியால் எதிர்கொள்ள முடியவில்லை. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்கிறார்கள். தேர்தல் ஆணையரை நியமிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை நம்ப மாட்டேன் என்று மோடி மற்றும் பாஜகவினர் கூறினார்கள். ஆனால் அவர்களால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையரை 130 கோடி மக்களும் நம்ப வேண்டும் என்று சொல்வது பாஜகவின் நாடகம்.
SIR பணிகள் எதுவும் வெளிப்படையாகவோ, வேகமாகவோ நடக்கப் போவதில்லை. என்னுடைய குழந்தைகள் 2005ல் வாக்களித்தவர்கள் அல்ல.. அதில் ஒரு குழந்தை மதுரையில் இல்லை.. ஆனாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அதிகாரிகள் படிவத்தை வாங்கிக் கொள்கிறார்கள். நீங்கள் யார் பார்த்துக் கொள்வதற்கு?.. என்னுடைய வாக்கு அது..
என்னுடைய வாக்கு எப்படி இணைக்கப்படுகிறது என்பதற்கு தெளிவான வழிக்காட்டுதல் இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரதமரே நம்பவில்லை.. களத்தில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. மதுரையில் 30 சதவிகித படிவங்கள் கூட கொடுக்கப்படவில்லை. எல்லோரும் SIR பணியில் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கு மாநில அரசு காரணம் என்று பாஜகவும், தேர்தல் ஆணையமும் செய்து வருகிறது. டிசம்பர் 4ஆம் தேதிக்குள் படிவத்தை கொடுத்து படிவத்தை வாங்கி இருக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு முன்னால் வாக்கற்றவர்கள் பெரும் எண்ணிக்கையில் நின்று போராடும் வரை இந்த பிரச்சனை இருக்க போகிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் நிலை என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications