அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சொல்லி அடித்த கைக்குறிச்சி காளை.. 26 காளைகளை அடக்கி ‘கார்’ வென்ற வீரர்!
மதுரை : பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இந்த ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கிய சிவகங்கையை சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல, சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் காளை தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டது. இதே காளை தான் கடந்த ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வாகி கார் பரிசு பெற்றது.
சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பிலும், சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்தோடு போட்டி போட்டு அடக்கினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரம், திருச்சி சூரியூர், மதுரை பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண ஏராளமான பொதுமக்கள், பார்வையாளர்கள் ஆண்டுதோறும் வருகை தருவார்கள் என்பதால் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

களம் கண்ட காளைகள் - காளையர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் அதிகமான மாடு பிடி வீரர்களும் களம் கண்டனர்.

வீரர்கள் படுகாயம்
ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு வழங்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சுமார் 100 காளைகள் வீதம் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 மாடு பிடி வீரர்கள், 24 மாடுகளின் உரிமையாளர்கள், 14 பார்வையாளர்கள், 2 காவலர்கள் என 53 பேர் காயமடைந்தனர்.

பரிசுகள்
ஒவ்வொரு சுற்று முடிவிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்கக்காசு, பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி, பீரோ, சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன. காலை முதல் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 823 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதில் 26 காளைகளை அடக்கி சிவகங்கையைச் சேர்ந்த அபி சித்தர் முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து 20 காளைகளை அடக்கிய ஏனாதியை சேர்ந்த அஜய் இரண்டாவது இடமும் 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

26 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு
இதையடுத்து முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த அஜய்க்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அந்தக் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதே காளை தான் கடந்த ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வாகி கார் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications