வாரா வாரம் கோவிலுக்கு போவேங்க.. மதுரை மீனாட்சி கோவிலை செப்பனிட நடவடிக்கை- பழனிவேல் தியாகராஜன் பளிச்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும், தனக்கு கடவுள் பக்தி இருப்பதாகவும், வாரத்திற்கு ஒருமுறையாவது கோவிலுக்கு செல்வது தனது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்டாலின் அமைச்சரவையில், நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவான, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
நேற்று அமைச்சரவை பதவியேற்ற நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தனது கோவில் மற்றும் கடவுள் நம்பிக்கை பற்றி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி
தேர்தலில் போட்டியிடும்போது பழனிவேல் தியாகராஜன், வாக்காளர்களுக்கு மூன்று வாக்குறுதிகளை அளித்தார், "ஒருங்கிணைந்த கழிவுநீர் அமைப்பு, ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், ஒவ்வொரு நபருக்கும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது, ஆகிய வாக்குறுதிகளை தாண்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுப்பிக்கப்படும் என்பதும் அவரது வாக்குறுதி. ஏனெனில் மதுரை மத்திய தொகுதியில்தான், மீனாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தாத்தா காலத்தில் கும்பாபிஷேகம்
மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்குமான உறவு நீண்ட நெடியது. 1963 ஆம் ஆண்டில், பழனிவேல் தியாகராஜன் தாத்தா பி.டி.ராஜன், மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்தார். புதுப்பிக்கப்பட்ட கோவிலில் தான் அதைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார் பழனிவேல் தியாகராஜன்.

கருணாநிதிக்கும் தெரியும்
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், திமுகவின் கடவுள் மறுப்பு நிலைப்பாட்டிற்கும் எனது பக்திக்கும் இடையில் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. கடவுள் மீதான எனது பக்தி பற்றி கருணாநிதியும் அறிந்திருந்தார். எனது தந்தை 2006ல் காலமான பிறகு, ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமாவது, கோவிலுக்கு வருவதாக சபதம் எடுத்தேன். கடந்த 15 ஆண்டுகளாக, நான் எந்த ஊரில் இருந்தாலும், அந்த வாக்குறுதியை மறந்தது இல்லை. ஓரிரு முறைதான் கோவில் செல்ல முடியாமல் போயிருக்கும். நான் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விரும்பியதற்கு, அதற்கு, மீனாட்சியம்மன் கோவில் இருப்பதுதான் காரணம். கருணாநிதிக்கும் அது தெரியும் என்றார்.

சபரிமலை ஐயப்பன்
பி.டி.ஆரின் குடும்பம் சபரிமலை ஐயப்பன் கோவிலுடனும் பாரம்பரிய உறவை பேணி வருகிறது. நீதிக் கட்சியை நிறுவியவர், தியாகராஜனின் தாத்தா, பி.டி.ராஜன். ஆனால் அவர்தான், ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்பன் சிலை வழங்கியவர். 1950களில் சபரிமலையில் நடந்த ஒரு பெரிய தீ விபத்துக்குப் பிறகு, ஐயப்பன் சிலையை நன்கொடையாக வழங்கினார் பி.டி.ராஜன். "தீ விபத்துக்குப் பிறகு, பந்தளம் மன்னரும், பிரதான குருக்களும் ஒரு ஜோதிடரை சந்தித்தனர். அவர்தான், எங்கள் தாத்தாவை அணுகுமாறு கூறியுள்ளார். எனவே தாத்தாவும், ஐயப்பன் சிலையை வழங்கினார் என்று புன்முறுவலுடன் சொல்கிறார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications