என் தந்தை பெயர் சிதம்பரம் பிள்ளை.. வ.உ.சி சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் வாயைவிட்ட சுந்தர்.சி
மதுரை: தனது தந்தையின் பெயர் சிதம்பரம் பிள்ளை என்று இயக்குநர் சுந்தர்.சி பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், சுந்தர்.சி-யின் பேச்சு புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பாக மதுரை சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருக்கு 140 அடி சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை அம்மா திடலில் நடைபெற்றது. வ.உ.சிதம்பரனார் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

இதில் மத்திய இணையமைச்சர் எ.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயகுமார் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இயக்குநர் சுந்தர்.சி பேசுகையில், என் பெயர் சுந்தர்.சி.. இதில் சி என்பது என் தந்தையின் பெயர்.. சிதம்பரம் பிள்ளை.. அவருக்கு என் தாத்தா அந்த பெயரை சூட்டியதற்கு காரணம் வ.உ.சிதம்பரனார் தான்.
என் தாத்தா நினைத்திருக்க கூட மாட்டார்.. ஏ.சி.சண்முகம் வ.உ.சி.க்கு 150 அடியில் சிலை அமைக்கப் போகிறார். அதன் அடிக்கல் நாட்டு விழாவில் நான் பங்கேற்று பேசும் பாக்கியம் கிடைக்கும் என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டார்கள். இந்த சபையில் நிற்க காரணமாக அமைந்த ஏ.சி.எஸ் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கப்பல் என்றால் வ.உ.சி. நினைவுவரும்.
அதுபோல் நட்பு என்றால் ஏ.சி.எஸ் தான்.. ஏனென்றால் நண்பர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட தயங்கியதே இல்லை.. நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அல்ல.. தெரியாதவர்கள் கூட அவர் வாசலில் நின்றால், அவரிடம் இல்லை என்ற வார்த்தையே சொல்ல மாட்டார். அப்படியொரு வள்ளல். அவர் வ.உ.சி சிலையை திறக்கிறார் என்றால், அதற்கு பின் ஒரு நல்ல நோக்கம் உள்ளது.
சுதந்திரத்தின் அருமை இளம் தலைமுறைக்கு தெரியவில்லை என்ற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது. இளைஞர்கள் வரலாறு படைக்க வேண்டும் என்றால், வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஏ.சி.எஸ் இந்த சிலையை அமைப்பது வ.உ.சி.யின் பெருமையை சொல்வதற்கு தான். சிதம்பரனார் ஒரு செல்வந்தர்.. வழக்கறிஞர்.. சகலகலா வல்லவர்..
அவர் படிப்பதற்காக அவரின் தந்தை அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தையே கட்டியவர்.. ஆனாலும் சுதந்திரத்தின் போது சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் செலவு செய்து சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார்.. நாளை வ.உ.சி. சிலையை பார்க்கும் போது அவரின் நினைவு இளைஞர்கள் மனதில் நிற்கும்.. இந்த மாபெரும் பணியை செய்யும் ஏ.சி.எஸ் சாருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications