மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?
மதுரை: மதுரை மண்ணின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் கண்டிப்பாக மக்கள் தனக்கு வெற்றிக்கனியை பரிசளிப்பார்கள் என சுந்தர் சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. களத்தில் போட்டி கடினமாக இருந்தாலும் அதைக் கண்டு ஒதுங்கிப் போக முடியாது என்றும், வெற்றி பெறவே போராடுவதாகவும் அவர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.. மதுரையை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கோட்டை எனக் குறிப்பிட்ட சுந்தர்சி மக்களின் ஆதரவோடு சட்டமன்றத்திற்குள் நுழைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளது, அதிமுக கூட்டணியின் கவனத்தை பெற்று வருகின்றன.
மதுரை மத்திய தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பிரபல சினிமா இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி.... இதனால் மதுரை அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுந்தர் சி மதுரை
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதுரையின் மேற்கு மற்றும் மத்திய தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடுவதாகத் தெரிவித்தார்..
இதில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுகிறார்.. பாஜக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில் ஒன்றாக மதுரை மேற்கு தொகுதியில் தாமரை சின்னத்தில் தங்கள் கட்சி போட்டியிடுவதாகவும், இந்த ஆட்சி மாற்றத்தில் சுந்தர் சி கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளே வருவார் என்றும் அவர் கூறினார்..
எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, "மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும் மதுரை மண்ணின் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையாலும் மக்கள் தனக்கு நல்ல வெற்றியைத் தருவார்கள்.. இதுவரை திரைத்துறையில் இயக்குநராகப் பல பேட்டிகள் கொடுத்திருந்தாலும், அரசியல் களம் தனக்குப் புதியது.. இந்த வாய்ப்பை வழங்கிய புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கூட்டணியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஜான் பாண்டியன் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
மதுரைக்கு வர காரணம்?
நான் மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், இது புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரின் கோட்டை... மதுரை மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு.. குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுப்பது, சாலை வசதிகள் மற்றும் மேம்பாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்காகவே இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
தொகுதி பிரச்சனைகள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும்.. ஷூட்டிங்குக்காக பலமுறை மதுரைக்கு வந்திருக்கிறேன். அதனால் இங்கிருக்கும் மக்களின் தேவைகளை அலசி ஆராய்ந்து ஒரு நல்ல தீர்வை வழங்க உழைக்கப் போகிறேன்..
பிடிஆருக்கு சவால்?
எதிர்த்தரப்பில் மூத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவது குறித்து கேட்கிறீர்கள், போட்டி என்பது எல்லா இடங்களிலும் கடினமாகத்தான் இருக்கும்.. போட்டி கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒதுங்கிப் போக முடியாது வெற்றி பெறவே களமிறங்கிப் போராடுவேன்.
வரும் ஏப்ரல் 4-ம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்ய போகிறேன்.. அன்றைய தினமே பிரசாரத்தையும் தொடங்க போகிறேன்,.. முக்கிய விஐபிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு பெற்ற பிறகு, முழு வீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளப் போகிறேன்" என்று உற்சாகமாக கூறினார் சுந்தர். சி.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications