கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி
மதுரை: என் பட டயலாக்கை வைத்து என்னையே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சிக்கிறார், நான் நினைத்தால் அவருக்கு பட்ட பெயர் சூட்ட முடியும், ஆனால் அப்படி செய்ய மாட்டேன் என சுந்தர்.சி. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்பவர் குறித்து நான் பேசமாட்டேன், அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது தோல்வி பயத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்.

வார்த்தைக்கு வார்த்தை தன்னை படித்தவர் என சொல்லிக் கொள்ளும் பிடிஆர், என்னை பல வார்த்தைகளை கொண்டு திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு நான் பதிலையும் சொல்லிவிட்டேன். பச்சோந்தி, கபடதாரி, கூத்தாடி, சினிமா சங்கி.. அவருக்கும் அவருக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
அவர் யூஸ் செய்த வார்த்தைகள் எல்லாம் என் பட டயலாக்குகளில் வந்த வார்த்தைகள்தான். அவர்களை விட நான் பட்ட பெயர்களை நன்றாக வைப்பேன். என் படத்தில் வந்த கைப்புள்ள, நாய் சேகர் மாதிரி எனக்கும் வைக்க தெரியும், அத்துடன் பல மடங்கு வைக்க முடியும். ஆனால் அப்படி செய்ய மாட்டேன். இவ்வாறு சுந்தர் சி தெரிவித்தார்.
மதுரை மத்திய தொகுதியில் திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் வேட்பாளர் சுந்தர் சி போட்டியிடுகிறார். இவருக்காக ஏ.சி.சண்முகம், குஷ்பு உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிடிஆர் வெர்சஸ் சுந்தர்.சி- குஷ்பு என்று மோதல்கள் அதிகரித்து வந்தன. முதலில் கனிமொழி, பிடிஆரை ஆதரித்து பேசிய போது சம்பந்தமே இல்லாதவர்கள் களத்தில் இருக்கிறார்கள் என விமர்சித்திருந்தார்.
இதற்கு சுந்தர் சி பதிலடி கொடுக்கையில், தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழியின் சொந்த ஊர் தூத்துக்குடியா, அவருக்கு அங்கு வீடு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
மதுரை மாநகராட்சி ஊழல், மதுரை குப்பை நகரம் என்றும் சுந்தர் சி விமர்சித்து வந்தார். அதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக் கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை.

2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே. நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் "மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை" என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புகின்றனர்.
சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள், பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது. இவ்வாறு பிடிஆர் தெரிவித்திருந்தார். இது போல் தொடர்ந்து பதிலுக்கு பதில் பேசி வருவதால் தேர்தல் களம் சூடாகியுள்ளது.
-
ஆம்பூரில் 101 வயது தாத்தா ஓட்டு.. பகீர் தில்லுமுல்லு! தமிழ்நாடு தபால் வாக்குப்பதிவில் வந்த மாற்றம் -
Villivakkam: ஜவ்வாக இழுக்கும் தொகுதி பிரச்சனை! ஆளும் கட்சிக்கு நெருக்கடியா! ஆதவுக்கு பாசிட்டிவ்? -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. தேர்தல் ஆணையம் உத்தரவு! -
சென்னையில் களம் காணும் 419 வேட்பாளர்கள்! அதிகபட்ச எண்ணிக்கையில் விஜய்யின் பெரம்பூர்தான் டாப்! -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! -
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?













Click it and Unblock the Notifications