போலீசுக்கு போகல.. திருடனும் சிக்கல.. அண்டாவில் நகைகள்.. இருட்டில் முரட்டு சம்பவம்.. சபாஷ் மதுரை
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருட்டு போன நகையை , அண்டாவை வைத்து வித்தியாசமான முறையில் கண்டுபிடித்து மீட்டுள்ளனர் கிராம மக்கள். இந்த பார்முலாவால் முதல் நாளில் 23 பவுனும், 2-ம் நாளில் 3 பவுனும் கிடைத்தது. போலீசுக்கும் போகாமல், திருடனையும் கண்டுபிடிக்காமல், திருடிய பொருட்களை மட்டும் கிராமத்தினர் நூதனமாக மீட்டது வியக்க வைத்துள்ளது.
மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் நகைகள் திருடு போனால் அதை கண்டுபிடிக்க பல்வேறு வித்தியாசமான முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் ஒரு முறை தான் அண்டா வைத்து திருட்டு போன பொருட்களை மீட்பது. இந்த முறையில் 26 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. எப்படி என்பதை பார்ப்போம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் 50 வயதாகும் ராகவன் . இவர் பெரிய பொக்கம்பட்டி ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள்(45), இவர் அந்த பகுதியில் விவசாய வேலை செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி ராகவன் பாண்டியம்மாள் தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். அதில் யார் முதலில் வீட்டுக்கு வருகிறார்களோ, அவர்கள் வீட்டு கதவை திறக்க வசதியாக சாவியை எப்போதும் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.
சம்பவம் நடந்த அன்று ராகவன், முதலில் வீட்டுக்கு வந்தார். அவர் கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது மேலும் பீரோவில் இருந்த தங்க சங்கிலி, நெக்லஸ், கம்மல், ஆரம் என மொத்தம் 26 பவுன் நகையும், ரூ.21 ஆயிரத்து 500-ம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரித்துள்ளார்கள். விசாரணையில் உள்ளூர் நபர் யாரோ தான் திருடியது உறுதியானது.
இதனிடையே கிராம மக்களின் பஞ்சாயத்து ஒன்று கூடியது. கிராமத்தின் வழக்கப்படி திருடப்பட்ட நகையை மீட்க அண்டா வைத்து முயற்சி செய்யலாம் என அனைவரும் பஞ்சாயத்தில் முடிவு எடுத்தார்கள் அதன்படி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கவர் கொடுக்க முடிவு செய்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கவர் கொடுத்தார்கள். மொத்தம் அங்குள்ள 100 வீடுகளுக்கும் கவர் கொடுத்தார்கள்
இந்த முறைப்படி, நகை கிடைக்காவிட்டால் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர்.. இதுகுறித்து போலீசாரிடமும் தெரிவித்தார்கள் அன்றைய தினமே, கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி வாசலில் 2 அண்டாக்கள் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணியளவில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் அணைக்கப்பட்டது..
ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒரு நபர், தாங்கள் வாங்கிய கவரை கொண்டு வந்து அண்டாவில் போட்டு சென்றாரகள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு 9 மணியளவில் தெரு விளக்குகள் மீண்டும் எறியவிடப்பட்டன. ஊர் மக்கள் அனைவரும் திரண்டார்கள். அண்டாவில் உள்ள ஒவ்வொரு கவராக பிரித்து பார்க்கப்பட்டன. அப்போது அதில் ஒரு கவரில் மட்டும் திருடப்பட்டு இருந்த 23 பவுன் நகைகள் இருந்தது. அதனை கண்டு கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
எனினும் இன்னும் 3 பவுன் நகையும், ரூ.21 ஆயிரத்து 500-ம் கிடைக்க வேண்டுமே, என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார்கள். இதையடுத்து கடந்த நவம்பர் 25-ந்தேதி மீண்டும் ஒரு முறை அண்டா வைத்து கவர் கொடுத்து அதே நடைமுறையை பின்பற்றினார்கள் இறுதியில் அதேபோல் விளக்கு அணைக்கப்பட்டு அண்டா வைக்கப்பட்டது.
அதில் போடப்பட்ட ஒரு கவரில் 3 பவுன் நகையும், ரூ.21 ஆயிரத்து 500-ம் இருந்தது. அதனால் கிராம மக்கள் அனைவரும் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நகை கிடைத்ததில் ராகவனும், அவரது மனைவி பாண்டியம்மாளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். ஊர் மக்களும் மகிழ்ந்து போனார்கள். போலீசுக்கும் போகாமல், திருடனையும் கண்டுபிடிக்காமல், திருடிய பொருட்களை மட்டும் அண்டாவை வைத்து நூதனமாக மீட்டது வியக்க வைத்துள்ளது.
-
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
தங்கத்தை விட்டு தள்ளுங்க.. போர் ஆரம்பித்தவுடன் எகிறியது "இது" தான்! ஆனாலும் ஒரு ரிஸ்க் இருக்கு -
தலைகீழாகப் போகுதே தங்க மார்க்கெட்! இந்த நேரத்துக்கெல்லாம் 2 லட்சம் போயிருக்கனும்! தொடர் சரிவு ஏன்? -
ரூ.14 கோடி தங்கம்! விருதுநகரில் பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டில் சிக்கிய நகைகள்! யாருக்கு சொந்தமானது? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications