Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்.. “தீண்டாமை உறுதிமொழி கட்டாயம்” - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களில், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு சீசனை பாதுகாப்பாகவும், கோலாகலமாகவும் நடத்த தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு மதுரை மாவட்​டம் அலங்​காநல்​லூர், பாலமேடு மற்​றும் அவனி​யாபுரத்​தில் நடை​பெறும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகள் உலகப் புகழ்​பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்​டிகளின்​போது வாடி​வாசல்​களில் காளை​களை அவிழ்ப்​ப​தையும், அவற்றை வீரர்கள் அடக்குவதையும் ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள் பெரு​மை​யாக கருதுகின்​றனர்.

Jallikattu madurai tn government

இந்த ஜல்லிக்கட்டுப் போட்​டிகளைத் தொடர்ந்து தமிழகத்​தின் பிற மாவட்​டங்​களில் போட்​டிகள் நடை​பெறும். அடுத்த மாதம் நடை​பெற இருக்​கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை, திண்​டுக்​கல், தேனி, சிவகங்​கை, திருச்சி போன்ற தென்​ மாவட்​டங்​களில் காளை உரிமை​யாளர்​கள் தங்​கள் காளை​களைத் தயார்​படுத்​தும் பணிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

வரும் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெறுகின்றன. திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் புகழ்பெற்று விளங்குகின்றன. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்படி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டு 2026 - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாவட்ட ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது. வருவாய்த் துறையினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். விலங்குகள் வதை தடுப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்க கூடாது. காளைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.

போட்டி நடைபெறும் தினத்தன்று, 5 கி.மீ. சுற்றளவுக்கு அருகில் உள்ள அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும்.
சுகாதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு முழு உடல் தகுதி, ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.
காயம் அடைந்தவர்களுக்கு முறையான முதலுதவி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறையினர் பார்வையாளர் கேலரி, இரட்டைத் தடுப்புகள் உறுதிச் சான்று வழங்கல், இரட்டை அரண்கள் குறைந்த பட்சம் 100 மீட்டர் நீளம், 8 அடி உயரத்துக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் போட்டி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையிலான காவலர்களை நியமித்து சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் விழாக் குழுவினர் முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்படும் காளைகள் பட்டியலை வழங்க வேண்டும். பார்வையாளர்களுக்கு உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை உரிய விதிமுறைபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு அழைத்துவர வேண்டும்.

காளைகளுக்கு போதுமான ஓய்வு மற்றும் அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட காளைகள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்து, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து விதி மீறலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காளைகளின் உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயர்களை அறிவிக்கக் கூடாது. மேலும், ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+