ஆர்எஸ்எஸ் அங்கீகாரம் பெற்ற கட்சியா? எந்த சட்டத்தில் பதிவு?ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி
மதுரை: ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது? தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அரசியல் கட்சியா? என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.இயக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். தொடக்க நாளான விஜயதசமி அன்று ஊர்வலங்கள் நடத்துவது வழக்கம்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி தரவில்லை. அப்போதைய பதற்றமான சூழ்நிலைகளால் போலீசார் அனுமதி தர மறுத்தனர். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றன. பின்னர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டும் அக்டோபர் 22-ந் தேதி தமிழ்நாட்டின் மொத்தம் 14 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக போலீசில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஒரு அரசியல் கட்சி எனில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என சரமாரியாக கேள்வி கேட்கப்பட்டது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். பேரணி, ஊர்வலத்தில் யார் யார் பங்கேற்பர்? மொத்தம் எத்தனை பேர் பங்கேற்க கூடும்? ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடியும் என்கிற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரணிக்கு தமிழ்நாடு அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் பேரணி தொடர்பான முழுமையான விவரங்களுடனும் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications