தமிழகத்தில் காவல்துறை இபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா? சந்தேகம் வருவதாக அமமுக விமர்சனம்!
மதுரை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இன்னும் காவல்துறையை பொறுத்தமட்டில் எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது என்று அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்பட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி மீது அவதூறு பேச்சு
முன்னதாக விமான நிலையத்தின் உள் வளாகத்திற்குள் பேருந்தில் பயனம் செய்து கொண்டிருந்தார். பேருந்தில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தார் அப்போது அவரது அருகில் நின்ற வாலிபர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியிருந்தார். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அவதூறாக பேசிய நபரை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

மதுரை விமான நிலையத்தில்..
இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு சொந்த ஊருக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

மகேந்திரன் குற்றச்சாட்டு
இவ்விவகாரம் தொடர்பாக ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோ மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுவை அளித்து இருந்தனர். இந்த புகாரின் பேரில் அரசியல் கட்சி தலைவரை பொதுவெளியில் அவதூறாக பேசியதாக ராஜேஸ்வரன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை கடுமையாக விமர்சித்த அமமுக, காவல்துறை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக கூறியது. இது தொடர்பாக அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ?
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மகேந்திரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இன்னும் காவல்துறையை பொறுத்தமட்டில் எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ என்ற ஐயம் எங்களுக்கு உள்ளது" என்றார். இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரன் அவனியாபுரம் போலீசில் நேற்று மாலை ஒரு புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதில், எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில், அவரது பாதுகாவலர் மற்றும் சிலர், என்னை தாக்கியதுடன், என்னிடம் இருந்த செல்போனையும் பறித்து சென்றனர். மேலும் என்னையும் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications