Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 தேர்தலில் திமுக கூட்டணி.. என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க.. கொந்தளித்த தமிழிசை

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2026 இல் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளவெளுத்து போகும். மெரினாவில் வான் சாகசத்தைக் காண வந்தவர்களின் உயிரிழப்பை அரசியலாக்க கூடாது எனும் திமுக, கவரைப்பேட்டை ரயில் விபத்தை அரசியல் ஆக்குவது ஏன் என்று புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேர் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வந்திரு்தார். இதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தல் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

tamilisai soundararajan dmk

மழைக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உதயநிதி வார் ரூமில் அமர்ந்துகொண்டு உருவாக்குகின்றார். திமுக அரசு விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கக் கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம்தான்.

மெரினாவில் வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம்போல பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் ஸ்டாலின் தான் முதலில் குரல் கொடுத்திருப்பார். ராகுல் காந்தியும் தமிழகத்தில் நடக்கிற அசம்பாவிதத்திற்கு குரல் கொடுக்கமாட்டார். அதனால் தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரஸுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ரயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

ரயில் விபத்தை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ரயில் விபத்து மத்திய அரசின் சதியா என்று கூறிய ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். வான் சாகசத்தின் போது ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்றிருந்தார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த போது ராகுல் எங்கே போனார்.

விமான சாகசத்தில் உயிரிழந்ததை அரசியலாக்கக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால், திமுக எதை எடுத்தாலும் அரசியலாக்கும். பொதுமக்களும், திமுகவின் கூட்டணி கட்சிகளுமே திமுகவிற்கு எதிராக திரும்பியுள்ளனர். நிச்சயமாக 2026 தேர்தலில் இதே திமுக கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள், மது விலக்கு பிரச்சினையை வைத்து விசிக ஒரு புறம் செல்கின்றனர். தங்களுக்கும் ஆட்சியில் பங்கு எடுக்க வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து கூறியிருக்கின்றனர்.

2026 இல் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெளவெளுத்து போகும். டெங்கு இல்லை, மழை பாதிப்பில்லை என்று கூறுவார்கள் அதுபோலத்தான் தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பதுதான்.

விஜய் ஆயுத பூஜைக்கு வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு, அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால், தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்பார்கள். இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர கட்டாயமாக மறுப்பார்கள்.

அதனை விஜய் நன்கு உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம். அவர் மட்டுமல்ல முதல்வரிடம் இருந்தும் தீபாவளி வாழ்த்தை எதிர்பார்க்கிறோம். திமுக தலைவராக இல்லை என்றாலும் தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+