Tasmac shops closed: இன்று மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்!
மதுரை: பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜை அனுசரிக்கப்படும் நிலையில் இன்று 3 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை உட்கோட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயுத் தீர்வுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தினமும் டாஸ்மாக் வருமானம் 100 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில், மது விற்பனை விண்ணைத் தொடும்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான தலைவர்களின் நினைவு தினம், கோவில் திருவிழா போன்ற தினங்களில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் இன்று அனைத்து மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மதுரை மாவட்டத்தில் அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினம் முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (PL1/FL2/FL3/PL3A மற்றும் PL11) அனைத்தும் செப்டம்பர் 11 ஆம் தேஹி ஒரு நாள் மட்டும் அமரர் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மூடப்பட்டு இருக்கும்.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டும் அதே நடைமுறையை பின்பற்றுவதற்காக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த நாளில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவித்திருந்தார். தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இமானுவேல் சேகரன் அவர்களின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை சிவகங்கை மற்றும் மானாமதுரை காவல் உட்கோட்டங்களில் உள்ள 56 அரசு டாஸ்மாக் மதுபானச் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3 மதுபானக் கூடங்கள் முழுமையாக மூடப்பட்டு இயங்காது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications