மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்
மதுரை: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கோயில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 14 ஆம் தேதி சித்திரை மாதம் பிறந்தது. இதனால் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் அங்கு வைகை ஆற்றில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருவது வழக்கம். இது சித்திரை திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கொடியேற்றம், பட்டாபிஷேகம், திக்விஜயம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, அழகர் வைகையில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளாக நடைபெறும்.
முதல் 15 நாட்கள் தேரோட்டம், மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும். அடுத்த 15 நாட்களில் அழகர் கோயிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுவார். பின்னர் எதிர் சேவை, பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் முக்கியமானது மண்டூக ரிஷிக்கு மோட்சம் அளிப்பது மற்றும் புராணம் வாசித்தல் ஆகும்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கூட்டம் கூடுவதை தவிர்க்க கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்குவதை தவிர்த்து விடுவதால் ஆகமவிதிகளின்படி இடையூறுகள் ஏற்படுவதை தடுக்க கோயில் புரோகிதர்கள் முக்கிய நிகழ்ச்சியான மண்டூக ரிஷிக்கு மோட்சம் அளிப்பது மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தலாம் என அறிவுறுத்தியதால் இவை மட்டும் நடைபெறுகிறது.
எனவே மேற்கண்ட நிகழ்ச்சிகளை வரும் மே 8 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் மக்கள் கண்டு களிக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications