காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியை தரிசித்த மக்கள் - வெள்ளியன்று கோவில் திறப்பால் மகிழ்ச்சி

வெள்ளி, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களிலும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் கோவில்களைத் திறக்க அரசு
அளித்துள்ளதால் விஜயதசமி தினமான இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பல மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

வாரத்தின் ஏழு நாளில் எந்த நாள் கோவிலுக்கு போனாலும் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கும் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கும், சிவ ஆலயத்தில் சனிபகவானையும் வழிபட வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வரவே வெள்ளி, சனி, ஞாயிறு தவிர பிற நாட்களில் சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்தது. என்னதான் 4 நாட்கள் அனுமதி இருந்தலும் மீதமுள்ள நாட்களும் கோவில்களில் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர். தீச்சட்டி எல்லாம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

விஜயதசமி பண்டிகை

விஜயதசமி பண்டிகை

வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை நாளில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதுபற்றி அரசு முடிவை அறிவிக்கும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். இந்த நிலையில் இன்று கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சி காமாட்சிஅம்மன்

காஞ்சி காமாட்சிஅம்மன்

வாரத்தின் ஏழு நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசு அனுமதி அளித்ததை அடுத்து விஜயதசமி தினமான இன்று அதிகாலை முதலே மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி உள்ளிட்ட பல ஆலயங்களில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் வழிபாடு

பக்தர்கள் வழிபாடு

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை 6 மணிக்கே கோவில்கள் வழங்கம் போல் திறக்கப்பட்டது காலை முதல் பக்தர்களையும் அனுமதித்து வருகின்றனர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை வழப்பட்டனர். இதே போல் ஏகாம்பரநாதர் கோவில், அத்தி வரதர் பெருமாள் கோவில் என அனைத்து கோவிலிலும் பக்தர்கள் வழிபட வந்தனர். சமூக இடைவெளியுடனும், முக அணிந்தவர்களையும் கிருமி நாசினி வழங்கி அனுமதித்து வருகின்றனர்.

அம்மன் தரிசனம்

அம்மன் தரிசனம்

பொதுவாகவே வெள்ளிக்கிழமையன்று கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். கொரேனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பலரும் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல மாதங்களுக்குப் பிறகு இன்று கோவில் திறக்கப்பட்டதால் பெண் பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் இன்று அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

அண்ணாமலை நன்றி

அண்ணாமலை நன்றி

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் மக்களோடு இணைந்து தொண்டர்களும் மக்களோடு கோவில்களைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர். 10 நாட்களில் திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் கோவில்களை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தேன். எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோயில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சேகர்பாபு பேட்டி

சேகர்பாபு பேட்டி

அனைத்து நாட்களிலும் கோயில்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் எனும் அறிவிப்பை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் வழிகாட்டுதல்படி இன்று முதல் அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

அர்ச்சனை செய்ய அனுமதியில்லை

அர்ச்சனை செய்ய அனுமதியில்லை

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். அதே நேரம், அர்ச்சனை, பூ, மாலை பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது. அனைத்து நாட்களிலும் கோயில்களை வழிபாட்டிற்கு திறப்பதாக வெளியிடப்பட்ட முடிவை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்றார். மக்களின் கோரிக்கைகளை, பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றே முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் எராளமான பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+