காதல் கல்யாணம்.. கடத்தலுக்கு பின் நேரில் வந்த கிருத்திகா.. கோர்ட் சொன்னது என்ன? நிதின் பரபர பேட்டி
தென்காசியில் காதல் கல்யாணம் செய்த கிருத்திகா என்ற பெண் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கிருத்திகா செவ்வாய்கிழமை ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜராகினார்.
மதுரை: தென்காசியில் காதல் கல்யாணம் செய்த கிருத்திகா என்ற பெண் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கிருத்திகா செவ்வாய்கிழமை ஐகோர்ட் மதுரை கிளையில் ஆஜராகினார். அப்போது நீதிபதிகள், கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் -கிருத்திகா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவின் பெற்றோர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வினீத்திடம் இருந்து பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்தி செல்வது போன்ற சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வந்தனர்.
பெற்றோரால் கடத்திச் செல்லப்பட்ட கிருத்திகா எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், முதலில் கிருத்திகா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தனக்கும் உறவினரான மைத்ரிக் படேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்யாணம் முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் தான் கணவர், குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர், தன்னுடைய பெற்றோர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி செல்போன் மூலமாகவும் மாரியப்பன் வினித்திடம் கோரிக்கையும் வைத்தார்.

பிரிந்துவிடுவோம்
இதனிடையே கிருத்திகா இரண்டாவதாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், "என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நான் விரும்பியே என்னுடைய பெற்றோருடன் சென்றேன். நான் வினித் வீட்டில் இருந்தபோது, என்னுடைய பெற்றோரிடமிருந்து பணம் வாங்கிவருமாறு வற்புறுத்தினார்கள். அதோடு, என் பெற்றோர் மீது போலீஸிலும் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. தற்போது கணவரின் தொந்தரவு இல்லாமல் இருக்கிறேன். நாம் இருவரும் அவரவர் வழியில் போவதுதான் இருவருக்கும் நல்லது. இருவரின் குடும்பத்துக்கும் நல்லது. அதனால் என் குடும்பத்தினர் மீது கொடுத்திருக்கும் புகார்களை உடனே வாபஸ் வாங்க வேண்டும். அதுதான் இருவரின் குடும்பத்துக்கும் நல்லதாக இருக்கும்" என வினித்திடம் கோரிக்கை வைத்து கிருத்திகா வீடியோ வெளியிட்டிருந்தார்.

பல திருப்பம்
இதை பார்த்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட மாரியப்பன் வினித், கிருத்திகா ஏதோ நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவரை மீட்டுக் கொடுக்க வேண்டும் என போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோவில், "நாங்கள் இருவரும் காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டோம். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிருத்திகாவின் பெற்றோர், அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் நடந்ததாகக் கூறவில்லை. இப்போது வழக்கு, கைது ஆகியவற்றுக்குப் பயந்து கிருத்திகாவைக் கடத்திச் சென்று மிரட்டி ஏதேதோ பேசவைச்சுருக்காங்க... கிருத்திகா உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை சீக்கிரம் மீட்டு என்னிடம் சேர்க்க வேண்டும்" என்றார். இப்படி நாளுக்கு நாள் பல திருப்பங்களுடன் இந்த பிரச்னை தொடர்ந்து வந்தது.

வழக்கு
இதனிடையே, தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வினீத் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே உயர் நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை செவ்வாய்கிழமை நடந்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு கிருத்திகாவை தென்காசி காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். அப்போது திருமண புகைப்படங்களைக் காட்டி கிருத்திகாவிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் விசாரணை நடத்தினர். கிருத்திகா கடத்தப்பட்டத்தில் இரு வேறு கதைகள் உள்ளன. உண்மையை கண்டறிய சம்மந்தப்பட்ட பெண் அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

கிருத்திகா
தொடர் விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கிருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். கிருத்திகாவை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும். கிருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் கிருத்திகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நீதி கிடைக்கும்
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினித், "டிசம்பர் 27, 2022 இல் நாங்கள் இரண்டு பேரும் வீட்டை விட்டு சென்று கல்யாணம் பண்ணிகிட்டோம். ஜனவரி 4ம் தேதி நாங்கள் குற்றாலம் போலீசிடம் சரண்டர் ஆனோம். திருமணம் செய்ததை ஸ்டேட்மெண்ட் ஆக எழுதிக்கொடுத்தோம். 14ம் தேதி எல்லோருக்கும் தெரிந்தது போல, கிட்னாப் டிரை பண்ணாங்க.. ஜனவரி 20ம் தேதி பெற்றோர் முன்பாக நாங்கள் மறுபடியும் தாலிகட்டி கல்யாணம் பண்ணோம். இதனிடையே ஜனவரி 25ம் தேதி அவங்க கிட்னாப் பண்ணிட்டாங்க...இன்னைக்கு விசாரணையை பார்க்கும் போது எனக்கு நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு" என்றார்,
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications