Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தாங்க கோர்ட் ஆர்டர்! எங்களை Allow பண்ணுங்க!" அனுமதி கேட்ட CISF! 144-னு சொன்ன தமிழக போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சிஐஎஸ்எஃப் படையினருடன் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவு நகலை காட்டி தங்களை அனுமதிக்குமாறு மத்திய படையினர், காவல் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக காவல் துறையினர், 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.

karthigai deepam 2025 thirupparankundram 2025

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதை கண்டித்து இந்து அமைப்பினரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். அப்போது கோயில் சார்பாகவும் போலீஸார் தரப்பிலும் வைக்கப்பட்ட தடுப்புகளை இந்து முன்னணியினரும் பாஜகவினரும் கீழே தள்ளினர். தடுப்புகளை உடைத்தெறிந்துக் கொண்டு முன்னோக்கி வர முயற்சினர்.

மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றி வருகிறார்கள்.

தீபத் தூண்

தீபத் தூணில் விளக்கேற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் மனுதாரர் ராம ரவிக்குமார், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது காவல் ஆணையர் லோகநாதன், "144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் உள்ளே செல்ல அனுமதி இல்லை" என்றார்.

மத்திய படையினர்

அப்போது மத்திய படையினர், தங்களிடம் இருந்த கோர்ட் ஆர்டரை காட்டி அனுமதி கேட்டனர். ஆனால் லோகநாதனோ, 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் அனுமதிக்க முடியாது என கூறிவிட்டனர்.

மலைக் கோயில்

திருப்பரங்குன்ற மலை மேல் உள்ள தீபத்தூணில்தான் காலம்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வந்தது. பின்னர் மலையின் மீது சிக்கந்தர் தர்கா அமைக்கப்பட்டதால் இந்த நடைமுறை மாறியது. இதனால் உச்சி பிள்ளையார் கோயில் தீபத் தூணில் தீபம் ஏற்றி வந்தனர்.

கார்த்திகை தீபம்

நீண்டகாலமாக மலைமேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடம்

அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சொந்தமான மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகைத் தீபத்தன்று தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பியிருந்தேன்.

15 மீட்டரில் தர்கா

மலை உச்சியில் பாரம்பரியமிக்க தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. அந்த இடத்திலிருந்து தர்கா 15 மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் கோயில் நிர்வாகமோ தீபத்தூணிற்கு பதிலாக மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற முடிவு செய்துள்ளது சட்டவிரோதம்.

தீபத்தூணில் தீபம்

அதனால் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி அங்கு ஆய்வு செய்தார்.

கார்த்திகை தீபம்

பின்னர் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்திலிருந்து தர்கா தூரத்தில்தான் இருக்கிறது. எனவே அவர்களுக்கு இதனால் எந்த பிரச்சினையும் வராது என கூறி, தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், "தீபத்தூணில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரர், மத்திய பாதுகாப்பு படையினருடன் சென்று தீபம் ஏற்றலாம்" என்றார்.

தீபத்தூணில் மகாதீபம்

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்றப்படும் என கருதப்பட்டது. ஆனால் கோயில் நிர்வாகமோ உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றினர். இதனால் பாஜகவினரும் இந்து அமைப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸார் குவிப்பு

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அங்கு 100- க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்த போலீஸ் தடுப்புகளை இந்து அமைப்பினர் தூக்கி எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

144 தடை

மேலும் போலீஸாருடன் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டு இந்து அமைப்பினர் முன்னோக்கி சென்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்தனர். அப்போது 2 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு போடப்பட்டது. எனினும் தீபத்தூணில் விளக்கேற்ற மனுதாரர் ராம ரவிக்குமார், கோர்ட் உத்தரவுபடி, சிஐஎஸ்எஃப் படையினருடன் சென்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+