Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை வெள்ளத்தால் கூட்டணியில் விரிசல்? நிதியை வெங்கடேசனை கொடுக்க சொல்லுங்க.. அமைச்சர் மூர்த்தி பேச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதியடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டுமென எம்பி சு.வெங்கடேசன் கூறியிருந்தார். இந்நிலையில் வெங்கடேசனின் நிதியை கொடுக்க சொல்லுங்க என கூறியுள்ளார் அமைச்சர் மூர்த்தி. இதனால் இருவருக்கு இடையே கருத்து மோதல் வலுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து ஆறு நாட்களாக இரவு நேரங்களில் அதிகப்படியான கனமழை கொட்டி தீர்த்தது.

moorthy su venkatesan madurai

இதனால் மதுரை நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாத நிலையும் ஏற்பட்டது.

குறிப்பாக தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம், தபால் தந்தி நகர், பி பி குளம், கடச்சனேந்தல், முல்லை நகர் பனங்காடி, உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. அதிலும் குறிப்பாக மதுரை பிபி குளம், முல்லை நகர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் ஆலங்குளம் கண்மாயில் நீர் வரத்து அதிகமாகி உபரிநீர்கள் வெளியேறி மழை நீரோடு சேர்ந்து முல்லை நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்தது.

குறிப்பாக முல்லை நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து முல்லை நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வெளியே செல்ல முடியாமலும் தங்க முடியாமலும் தவித்து வருவதாகவும், குற்றம் சாட்டினர். இந்நிலையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள், எம்பி சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே வெள்ள பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மூர்த்தி, எம்பி சு.வெங்கடேசன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான அடிப்படைப் பொருட்களை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பருவமழை காலத்து இடர்களைப் போக்க அரசு நிர்வாகம் முழுமையாகவும், ஆற்றலோடும் செயல்பட அனைத்துவித முயற்சிகளையும் உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியம் . மேலும் தற்போது உடைமைகளை இழந்து , பொருளாதார மற்றும் வருவாய் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்த முழுமையான கணக்கெடுப்பினை மாநில அரசு நடத்திட வேண்டும். பண்டிக்கைக் காலம் உள்ளிட்ட சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடாக குறைந்தபட்சம் ரூபாய் 25,000 வழங்க வேண்டுமென தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறேன் என சு.வெங்கடேசன் கூறினார்.

இந்த நிலையில் எம்பி வெங்கடேசனின் கோரிக்கையை குறித்து அமைச்சர் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,"எங்கே பாதிப்பு ஏற்பட்டது எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை எம்பி தான் சொல்ல வேண்டும்" என்றதோடு, "நிதி வழங்க வேண்டும் என்றால் அவரது நிதியை வழங்க சொல்லுங்கள்" என கூறி இருந்தார்.

இதனால் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மூர்த்தி எம்பி சு.வெங்கடேசன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரை மக்கள் பலருக்கு பட்டா வழங்கவில்லை என எம்பி வெங்கடேசன் கூறியிருந்தார். அதே நேரத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்ததோடு, இது தொடர்பாக விழா ஒன்றையும் நடத்தி இருந்தார். இதனால் அமைச்சர் - எம்பி இடையே மோதல் ஏற்பட்டுள்ளதோடு, லோக்கல் கூட்டணியிலும் புகைச்சல் இருப்பதாக கூறுகின்றனர் மதுரை வாசிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+