சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது எதிர்பாராமல் நடந்தது.... சொல்வது செல்லூர் ராஜூ
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தவில்லை என்று அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை: அதிமுகவின் தோல்வி எதிர்பாராதது என்று முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தவில்லை என்று அன் அன்வர் ராஜா கூறியது தவறான கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா பரமக்குடியில் நடந்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வருபவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா என்று தான் மக்கள் எதிர்பார்த்து இருப்பார்கள். அப்படி அவர்களின் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டது என்றும் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
அன்வர் ராஜாவின் கருத்துக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும்,ஓபிஎஸ் ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம் என்று கூறினார்
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி எதிர்பாராதது என்று கூறிய அவர், இதற்கு தோழமைக் கட்சிகளும் காரணமல்ல என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பிரச்சாரத்தின் போது கூறவில்லை என்று அன்வர் ராஜா சொன்னது தவறான கருத்து என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications