பில்லி சூனியம்.. பேய்.. நள்ளிரவில் கேரள மாந்திரீகர்கள் நடுரோட்டில் யாக பூஜை.. ஷாக் வீடியோ
Recommended Video
மதுரை: மதுரையில் நடுரோட்டில் சிலர் கேரளா மாந்திரீகர்கள் மூலம் நள்ளிரவு யாக பூஜை நடத்தியுள்ளனர். இது தொடர்பான பீதியை கிளப்பும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் இன்று வரை இருந்து வருகிறது. இந்நிலையில் தீய சக்திகளை விரட்டுவதாகவும், ஏவல், பில்லி, சூனியம், போன்றவற்றை அகற்றி விடுவதாகவும் சிலர் கூறி, மதுரை மாநகர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் நடு ரோடுகளில் யாகம் வளர்க்கும் சம்பவங்கள் மதுரை மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள நேரு நகர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு அதிகமுள்ள சாலைகளில் நடுவே நடுரோட்டில் கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மாந்திரீகர்களை வைத்து யாகம் வளர்த்து பூஜை நடத்துயுள்ளார்கள். இந்த பூஜைகள் மூலம் ஏவல் பில்லி சூனியம் போன்றவைகளில் இருந்து காக்கபடுவதாக கூறி, இதற்காக பொதுமக்களிடம் பல்லாயிரக் கணக்கான ரூபாய் கட்டணமாக வசிப்பதாகவும் கூறப்படுகிறது,
சிலர் அண்டை வீட்டாருக்கு எதிராக இது போன்ற வேலைகளை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது, இதனைத் தட்டிக் கேட்டதால் கைகலப்பு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்ற சம்பவங்களும் மதுரையில் பல நடந்துள்ளது.

கேரளா மாந்திரீகர்களை கொண்டு யாகம் வளர்க்கும் வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி மதுரையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.












Click it and Unblock the Notifications